ஆஸ்துமா மூச்சுத்திணறல் கட்டுப்படுத்த இத்தனை வழிகளா??

0
127

ஆஸ்துமா மூச்சுத்திணறல் கட்டுப்படுத்த இத்தனை வழிகளா??

ஆஸ்துமா நீங்க கூடிய வீட்டு வைத்தியங்களையும் ஆஸ்துமாவை கட்டுப்படுத்த செய்ய வேண்டியவைகளையும் இந்த பதிவில் பார்ப்போம்.

பொதுவாக ஆஸ்துமா இருப்பவர்கள் வயிறு முட்ட சாப்பிடக்கூடாது. அரை வயிறு சாப்பாடு, கால் வயிறு தண்ணீர், கால் வயிறு காலியாக இருக்க வேண்டும். வயிறு முட்ட சாப்பிட்டால் செரிமான பிரச்சனை ஏற்பட்டு வயிற்று உப்புசம் ஆகி மூச்சு திணறல் ஏற்படும். அதேபோல் ஆஸ்துமா நோயாளிகள் உணவு ஆறிப்போனதாக இருக்கக் கூடாது. சூடாக இருக்க வேண்டும். ஆஸ்துமாவை சரி செய்யக்கூடிய வீட்டு வழிக்கு முறைகளை பார்ப்போம்.

1. ஒரு அகண்ட பாத்திரத்தை அடுப்பில் வைத்து ஒரு டம்ளர் பால் ஊற்றவும்.  அதில் கால் ஸ்பூன் மிளகு தட்டி சேர்க்கவும். பிறகு இரண்டு பல் பூண்டை தோல் உரித்து தட்டி சேர்க்கவும். அந்தப் பூண்டு நன்றாக வேகம் வரை பாலை கொதிக்க விடவும்.  பூண்டு வெந்தவுடன் பாலை இறக்கும் பொழுது அரை ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்க்கவும். அதில் சுவைக்காக ஒரு ஸ்பூன் பனங்கல்கண்டு சேர்க்கவும். நன்கு கொதித்த உடன் இறக்கி ஆரம்பித்து வெதுவெதுப்பான சூட்டில் பருகவும். பொதுவாக இந்த பாலை இரவு நேரங்களில் குடிப்பது நல்லது. ஆஸ்துமா இருப்பவர்கள் காலையில் அருகம்புல் சாறு குடிப்பது மிகவும் நல்லது. மேலும் காலை வெறும் வயிற்றில் துளசி இலைகளை சாப்பிடுவது மிகவும் நல்லது.

அல்லது துளசியை சாறு எடுத்து அதில் ஒரு ஸ்பூன் மிளகு பொடி செய்து சேர்த்து குடித்து வர ஆஸ்துமாவினால் வரும் மூச்சு திணறல் சரியாகும்.

நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் அதிமதுர கொடியை வாங்கி அதனை ஒரு டம்ளரில் ஒரு ஸ்பூன் போட்டு அதனுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டு வர ஆஸ்துமா பிரச்சனை மட்டுமில்லாமல் எவ்வித சளி பிரச்சனை இருந்தாலும் சரியாகும்.