கண்களுக்கு கருவளையம் உள்ளதா… கருவளையம் மறைய இதப் பண்ணுங்க…

Photo of author

By Sakthi

கண்களுக்கு கருவளையம் உள்ளதா… கருவளையம் மறைய இதப் பண்ணுங்க…

 

நம்மால் பலருக்கும் கண்களுக்கு கீழ் இருக்கும் கருவளையத்தை நீக்க இந்த பதிவில் சிறப்பான ஒரு மருத்துவ முறையை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

 

இந்த கருவளையங்கள் எதனால் ஏற்படுகின்றது என்றால் நம் உடலில் உள்ள ஊட்டச்சத்துகள் குறைபாடு காரணமாக ஏற்படுகின்றது. மேலும் தொலைக்காட்சி, செல்போன்கள் அதிக நேரம் பயன்படுத்துவதால் கூட இந்த கருவளையங்கள் தோன்றுகின்றது.

 

இந்த கருவளையங்கள் முக அழகை கெடுக்கும். மேலும் கருவளையங்கள் நாளடைவில் மேலும் கருமையாக மாறக்கூடும். இதனால் இதை சரி செய்வது மிகவும் அவசியமான ஒன்று. இந்த கருவளையங்களை எவ்வாறு குணப்படுத்துவது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

 

அதற்கு தேவையான பொருள்கள்…

 

* தக்காளி

* பச்சை எலுமிச்சை

* அரை உருளைக் கிழங்கு

* காபித்தூள்

* சோடா உப்பு

 

தயார் செய்யும் முறை…

 

முதலில் ஒரு பவுலில் காபித்தூளை சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதில் சோடா உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும். இரண்டையும் நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

 

பின்னர் தக்காளியை பாதியாக அறுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் உருளைக்கிழங்கை பாதியாக அறுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் பச்சை எலுமிச்சையை பாதியாக அறுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

 

அறுத்து வைத்து தக்காளியை எடுத்து பவுலில் உள்ள காபித்துளுடன் தொட வேண்டும். இதே போல எலுமிச்சியையும் உருளைக்கிழங்கையும் காபித்தூள் பவுலில் தொட வேண்டும். கருவளையத்தை போக்கும் மருந்து தயாராகி விட்டது. 5 நிமிடம் கழிந்து இதை கருவளையம் உள்ள இடத்தில் இதை வைத்து விட்டால் கருவளையம் மறையத் தொடங்கும்.