உங்களுக்கு செரிமான பிரச்சனை இருக்கின்றதா? தவறாமல் இதனை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்!
செரிமான பிரச்சனை உள்ளவர்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகள் என்னவென்று இந்த பதிவின் மூலமாக காணலாம்.
தற்போதுள்ள காலகட்டத்தில் இளம் வயதிலிருந்து செரிமான பிரச்சனைகள் ஏற்படுகின்றது. இதனை எவ்வாறு வராமல் தடுக்கலாம் மற்றும் எந்த வகையான உணவுகள் எடுத்துக் கொள்ளலாம் என்பதை இந்த காணலாம்.
பொதுவாக இஞ்சியினை வாசத்திற்காகவும் காரத்திற்காகவும் நம் உணவுகளோடு சேர்த்துக் கொள்கிறோம். இதனை தவிர உடல் செரிமானத்திற்கும் முக்கிய பங்கு வகிக்கிறது.
இஞ்சியில் பல வகையான மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது. நம் உடலில் செரிமானத்தை சரி செய்யும் மூன்று வகையான அமிலங்கள் உள்ளது எச்சில் மற்றும் செரிமான அமிலம் கல்லீரலில் சுரக்கக்கூடிய நொதி செரிமானத்தை ஊக்கப்படுத்தும்.
இந்த மூன்று வகையான திரவங்கள் இஞ்சி சாப்பிடுவதன் மூலமாக நமக்கு கிடைக்கிறது. இஞ்சியில் ஜிஞ்சரால் அதிகரித்து நம் செரிமானத்தை ஊக்கப்படுத்துவதற்கு உதவுகிறது. மற்றும் குடல் பகுதியில் உள்ள நச்சுக்களை சுத்தப்படுத்துகிறது. நாம் தினமும் எடுத்துக் கொள்ளக்கூடிய உணவுகளுடன் இஞ்சி சேர்த்துக் கொள்வது நன்மை தரும்.
செரிமான பிரச்சனைகள் உள்ளவர்கள் அன்றாடம் சாப்பிடக்கூடிய உணவுகளில் சீரகம் அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். சீரகத்தினை நம் உணவுகளுடன் எடுத்துக் கொள்ளும் பொழுது நம் கணையத்தில் உள்ள செரிமான நொதிகளை தூண்டி செரிமானம் சீராக நடைபெறும்.
நெஞ்சு எரிச்சல் உள்ளவர்கள் சிறிதளவு சீரகம் எடுத்து வாயில் 10 நிமிடம் வைப்பதன் மூலமாக நெஞ்சு எரிச்சல் குணமடையும். பொதுவாக நம் அசைவ உணவுகளில் புதினாவை அதிகம் எடுத்துக் கொள்வோம் மற்றும் சமையலுக்கு பயன்படுத்துகிறோம்.
புதினாவில் உள்ள சத்துக்கள் வயிற்றுக்கும் உணவு குழாய்க்கு இடையே உள்ள சதை நாளங்களை விரிவுபடுத்த உதவுகிறது. இதன் காரணமாக செரிமானம் எளிமையாக நடக்கிறது. புதினாவில் உள்ள மெண்டால் வயிற்று எரிச்சல் புளித்த ஏப்பம் ஆகியவற்றை குணப்படுத்துகிறது.