உங்க கிட்ட முட்டை இருக்கா? அப்போ ஒருமுறை கேரளா ஸ்டைலில் “முட்டை தீயல்” செய்து பாருங்கள்!

0
147
#image_title

உங்க கிட்ட முட்டை இருக்கா? அப்போ ஒருமுறை கேரளா ஸ்டைலில் “முட்டை தீயல்” செய்து பாருங்கள்!

முட்டை கொண்டு தயார் செய்யப்படும் தீயல் கேரளாவில் பேமஸான உணவு ஆகும். இதை ருசியாக செய்யும் முறை கீழே கொடுக்கப்பட்டு இருக்கின்றது.

தேவையான பொருட்கள்…

*முட்டை
*கொத்தமல்லி விதை
*பூண்டு
*இஞ்சி
*தேங்காய் துருவல்
*தேங்காய் எண்ணெய்
*கடுகு
*மிளகாய் தூள்
*உப்பு
*சின்ன வெங்காயம்
*கறிவேப்பிலை
*மல்லி தூள்
*கொத்தமல்லி இலை
*புளி தண்ணீர்

முட்டை தீயல் செய்வது எப்படி?

1)நான்கு முட்டையை வேக வைத்து ஓட்டை நீக்கி வைத்துக் கொள்ளவும்.

2)அடுப்பில் வாணலி வைத்து சிறிது தேங்காய் எண்ணெய் ஊற்றி கொத்தமல்லி விதை 2 ஸ்பூன், 6 பல் பூண்டு, 1 துண்டு இஞ்சி, 5 மிளகாய் வற்றல், 1 1/2 ஸ்பூன் தேங்காய் துருவல், 1 கொத்து கறிவேப்பிலை, 1 ஸ்பூன் கொத்தமல்லி தூள் மற்றும் 1 ஸ்பூன் மிளகாய் தூள் சேர்த்து வதக்கி ஆறவிட்டு பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.

3)அடுப்பில் வாணலி வைத்து தேவையான அளவு தேங்காய் எண்ணெய் ஊற்றி கடுகு சேர்த்து பொரிய விடவும்.

4)சிறிது நறுக்கிய பூண்டு மற்றும் இஞ்சி சேர்க்கவும். நறுக்கிய சின்ன வெங்காயம் 1 கைப்பிடி அளவு, சிறிது கறிவேப்பிலை, 1 ஸ்பூன் மிளகாய் தூள், அரைத்த விழுது, புளி தண்ணீர் சிறிதளவு ஊற்றி கொதிக்க விடவும்.

5)தேவைக்கேற்ப உப்பு மற்றும் சிறிது வெல்லம் சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விடவும்.

6)வேக வைத்துள்ள முட்டையை இரண்டாக நறுக்கி கொதிக்கும் கிரேவியில் போட்டு கொதிக்க வைத்து மல்லி தழை தூவி இறக்கினால் முட்டை தீயல் தயார்.