காது வழியா காதில் சீழ் வடிகிறதா??கவலை வேண்டாம்!!
கவலை பொதுவாக காதில் தண்ணீர் புகுவது என்பது நமக்கு அடிக்கடி நடைபெறும் பிரச்சனை தான். ஆற்றில், கடலில், குளத்தில், ஸ்விம்மிங் ஃபுல் இன்னும் ஏன் நாம் வீட்டில் குளிக்கும் போதும் காதுக்குள் தண்ணீர் புகுவது சகஜமான ஒன்று தான். காதுக்குள் தண்ணீர் புகுந்தால் காது அடைத்துக்கொள்ளும். சிலருக்கு காதில் தண்ணீர் புகுந்துவிட்ட பிறகு காதில் நீர் கோர்த்துக்கொண்டு சீழ் வடிய ஆரம்பிக்கும். ஆக காதுகள் தண்ணீர் சென்றுவிட்டாள் உடனடியாக அந்த நீரை அகற்றுவதற்க்கான வழியை பார்க்க வேண்டும். இல்லையென்றால் காதுகளில் தொற்று ஏற்பட்டு அதிக வாய்ப்புகள் உள்ளது. ஆக காதில் தண்ணீர் புகாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியமான ஒன்றாகும்.
காதுக்குள் தண்ணீர் புகுந்தாலோ, அல்லது சளிபிடித்தலோ நடுச்செவியில் சீழ் உற்பத்தி ஆகும். அந்த சீழ் ஓட்டை வழியாக வெளீயே வருவது தான் சீழ் ஆகும். சிலருக்கு இந்த சீழ் நிறைய உற்பத்தியாகி காதில் இருந்து வெளியே சீழ் வர ஆரம்பித்துவிடும். சிலருக்கு இது போன்று இருக்காது லேசாக காதுக்குள் பிசுபிசுப்பு தன்மை இருக்கும். இதனை சிலர் கட்டுக்கொள்ளாமல் விட்டுவிடுவார்கள்.
காதில் சீழ்வடிவது என்பது நாளடைவில் சரியாகிவிடும் என்று விடக்கூடிய பிரச்சனை அல்ல. இதற்கு முன்னோர்கள் வைத்தியமும் உண்டு. ஆரம்ப கட்டமாக இருந்தால் இதை கைவைத்தியம் மூலம் சரி செய்யமுடியும். காதில் புண் இருந்தால் தான் சீழ் வடிதல் உண்டாகும். இதை எப்படி நிறுத்துவது என்று பார்க்கலாம்.
1: ஊமத்தை இலையை இளசாக எடுத்து நீர்விடாமல் அரைத்து சாறு எடுக்கவும். சாறுடன் சம அளவு தேங்காயெண்ணெய் கலந்து சூடேற்றி ஆறியதும் மூன்று சொட்டு காதில் விட வேண்டும். தினமும் இரண்டு வேளை காதில் விட்டு வந்தால் சீழ் குணமாகும்.
2: பூண்டு, வசம்பு இரண்டையும் தட்டி வேப்பஎண்ணெயில் காய்ச்சி இரண்டு சிட்டிகை பெருங்காயம் சேர்த்து ஆறவைத்து இரண்டு துளி காதில் விட்டால் சீழ் வடிந்து வெளியேறும். தொடர்ந்து 3 அல்லது 5 நாட்கள் வரை இதை செய்தால் போதும். பூண்டில் இருக்கும் ஆண்டி பயாடிக் நுண்ணுயிர்க்கிருமிகளை எதிர்த்து போராடக்கூடியது.
3: நாயுருவி இலை கிடைத்தால் அதை அப்படியே உரலில் இட்டு இடித்து சாறாக்கவும். அதை காதின் உள்ளே விட்டு பிறகு பஞ்சை அடக்கிவிட வேண்டும். தினமும் மூன்று வேளையும் இரண்டு சொட்டு இந்த சாறை விட்டு வந்தால் காதில் சீழ்வடிதல் குணமாகும்.
4:தூதுவளை கீரை இருந்தாலும் அதை பறித்து அதன் இலைகளை இடித்து அதன் சாறை வெள்ளைத்துணியில் பிழிந்து வைத்துகொண்டு ஒரு துளி காதில்விட்டு வந்தால் காதுசீழ் குணமாகும்.
5:மூலிகையில் சிறந்த துளசி இலைகளுடன் கரிசலாங்கண்ணி சாறு கலந்து இரண்டையும் சம அளவு எடுத்து கலந்துகொள்ளவெண்டும். பிறகு காதுவலி வரும்போதெல்லாம் இதை இரண்டு துளி காதில் விட்டால் போதும்.
காது சீழ், காது புண் போன்றவை குணமாகும். இவையெல்லாமே காதில் சீழ் வடிதலை குணப்படுத்தும் மூலிகைகள்.காதுவலியை குணப்படுத்தவும் செய்யும்.