இனி தினமும் இந்த பழம் மட்டும்தான்!! மாதுளை பழம் பற்றி யாருக்கும் தெரியாத தகவல்கள்!! 

0
69

இனி தினமும் இந்த பழம் மட்டும்தான்!! மாதுளை பழம் பற்றி யாருக்கும் தெரியாத தகவல்கள்!!

நம் உடலுக்கு ஆரோக்கியம் தரும் பழத்தில் முக்கியமான ஒன்று மாதுளை பழம்.

மாதுளை சிறுமர இனத்தைச் சேர்ந்த பழ மரமாகும். 5000 ஆண்டுகளாக ஈரான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் பயிரிடப்பட்டு வருகிறது. இருந்தாலும் இதன் தாயகம் ஈரான் என்று சொல்லப்படுகிறது. மாதுளையின் பூ, பிஞ்சு,மற்றும் பழம் அதிக அளவில் மருத்துவ குணம் நிறைந்தது. மாதுளை பழத்தை உண்பதால் பல நன்மைகள் நம் உடலில் ஏற்படுகிறது.

மாதுளை பழத்தை எடுத்துக் கொள்வதால் வயிற்று கடுப்பு நீங்குகிறது. இரத்த பேதிக்கும் சிறந்த மருந்தாகிறது. மேலும் தடைப்பட்ட சிறுநீரை வெளியேற்றுகிறது. அதனைத் தொடர்ந்து பித்த நோய்களை நிவர்த்தி செய்கிறது மற்றும் குடற்புண்களை ஆற்றுகிறது. எந்த வகையான குடல் புண்ணையும் குணமாக்குகிறது. மாதுளை விதைகளைச் சாப்பிட்டால் இரத்த விருத்தி ஏற்படும் மற்றும் சீதபேதிக்கு சிறந்த நிவாரணம் அளிக்கும்.

மாதுளை பழத்தை உண்பதால் ஏற்படும் நன்மைகள்

இதயநோய் அபாயத்தை குறைக்கிறது.

புற்றுநோயின் அபாயத்தை குறைக்கிறது

கொலஸ்ட்ராலை குறைத்து எடையைக் கட்டுப்படுத்துகிறது. செல்களின் சேதத்தை எதிர்த்துப் போராடுகிறது.

சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பை கற்களை குணப்படுத்தும்.

கல்லீரல் ஆரோக்கியத்தை பராமரிக்கிறது. செரிமானத்தை ஊக்குவிக்கிறது புரோஸ்டேட் மற்றும் மார்பக புற்றுநோய் அபாயத்தை குறைக்கிறது.

மாதுளம் பிஞ்சு: பிஞ்சை காயவைத்துப் பொடிசெய்து ஏலக்காய் தூள், கசகசாத் தூள் அளவாகச் சேர்த்து தினம் இரு வேளை கொடுத்தால் சீதக் கழிச்சல் குணமாகும். பூவின் சாறும் அறுகம்புல்லின் சாறும் ஓரளவு சேர்த்துக் கொடுக்க மூக்கில் இருந்து குருதி வடிவது நிற்கும்.

ஒரு மாதத்தில் உள்ள சத்துக்கள்

கலோரி + 83%

வைட்டமின் சி – 17%

விட்டமின் கே – 14%

கார்போஹைட்ரேட் – 14%

புரதச்சத்து – 14%

பொட்டாசியம் 6%

இரும்புச்சத்து – 4%

மக்னீசியம் 3%

கொழும்பு – 1%

நார்ச்சத்து – 16%

 

தினமும் மாதுளை பழத்தை உண்பதால் பல்லில் ஏற்படும் பிளேக் உருவாவதை தடுக்கிறது. மேலும் கர்ப்பிணி பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் ஏற்படும் பிரச்சனைகளை குணப்படுத்துகிறது. தினமும் காலை கர்ப்பிணி பெண்கள் மாதுளை பழத்தை சாப்பிடுவதனால் ஹார்மோன் பிரச்சனைக்கு குறைந்து தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கிறது. இதனை உண்பதால் பெண்களுக்கு ஏற்படும் ஈஸ்ட்ரோஜன் பிரச்சனை குணமாகிறது.

author avatar
Jeevitha