உங்களுக்கு வயிற்றுப் பிடிப்பு(குடல் அலர்ஜி) பிரச்சனை உள்ளதா? இதற்கான உடனடி நிவாரணம் இதோ!!

Photo of author

By Divya

உங்களுக்கு வயிற்றுப் பிடிப்பு(குடல் அலர்ஜி) பிரச்சனை உள்ளதா? இதற்கான உடனடி நிவாரணம் இதோ!!

உங்களில் யாருக்கு வேண்டுமானாலும் வயிற்றுப் பிடிப்பு வரலாம்.இவை வயிற்றுப்பகுதியில் கடுக் கடுக் என்ற வலியை ஏற்படுத்தும்.தசை சுருக்கங்களின் போது ஏற்படக் கூடிய வலியை தான் வயிற்றுப் பிடிப்பு என்று சொல்கின்றோம்.

அடி வயிற்று உறுப்புகளில் ஏற்படும் மாற்றத்தால் வயிற்றுப் படிப்பு ஏற்படுகிறது.இந்த வயிற்றுப் பிடிப்பு பாதிப்பை ஆரம்ப நிலையில் கண்டறிந்து குணமாக்கி கொள்வது நல்லது.

வயிற்றுப்பிடிப்பு ஏற்படுவதற்கான காரணங்கள்:

1)உடல் உஷ்ணம்

2)அதிகப்படியான மன அழுத்தம்

3)மோசமான உணவுமுறை பழக்கம்

4)பெண்களுக்கு அதிகளவு உதிரப்போக்கு

5)செரிமானக் கோளாறு

6)மலச்சிக்கல்

7)வாயுத் தொல்லை

8)நெஞ்செரிச்சல்

வயிற்றுப்பிடிப்புக்கு இயற்கை வழி தீர்வு:

1.இஞ்சி
2.முருங்கை கீரை
3.மிளகு
4.பூண்டு
5.வெற்றிலை

உரலில் ஒரு துண்டு இஞ்சி,2 பல் பூண்டு மற்றும் 4 மிளகு போட்டு கொரகொரப்பாக இடித்துக் கொள்ளவும்.பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.

அதன் பிறகு இடித்த பொருட்கள் சேர்த்து மிதமான தீயில் கிளறி விடவும்.அதன் பின்னர் ஒரு வெற்றிலை,ஒரு கொத்து முருங்கை கீரையை போட்டு இரண்டு நிமிடங்களுக்கு கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.

இந்த பானத்தை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி குடித்து வந்தால் வயிற்றுப் பிடிப்பு முழுமையாக குணமாகும்.

மற்றொரு தீர்வு:

தேவையான பொருட்கள்:-

1.புதினா
2.இஞ்சி
3.எலுமிச்சை சாறு
4.தேன்

செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் ஒரு துண்டு இடித்த இஞ்சி,ஐந்து புதினா இலை சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.

இந்த நீரை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு,ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து கலக்கி குடித்து வந்தால் வயிற்றுப் பிடிப்பு பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.