உங்களுக்கு வயிற்றுப் புண் இருக்கிறதா… அப்போ வயிற்றுப்புண் குணமாக இதையெல்லாம் சாப்பிடுங்க… 

Photo of author

By Sakthi

 

உங்களுக்கு வயிற்றுப் புண் இருக்கிறதா… அப்போ வயிற்றுப்புண் குணமாக இதையெல்லாம் சாப்பிடுங்க…

 

தீராத வயிற்றுப் புண்ணால் அவதிப் படுபவர்கள் வயிற்றுப் புண் குணமாக இந்த பதிவில் கூறப்பட்டிருக்கும் உணவுகளை சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் புண் குணமாகும்.

 

வயிற்றுப் புண் எதனால் உருவாகின்றது..?

 

நாம் உண்ணும் உணவு செரிமானம் அடைவதற்கு இரைப்பையில் ஹைட்ரோகுளோரிக் அமிலம் மற்றும் பெப்சின் திரவம் ஆகியவை சுரக்கின்றது. இந்த இரண்டு அமிலங்களும் காலை வேலையில் அதிகமாக சுரக்கின்றது. நாம் அனைவரும் காலை உணவை உட்கொள்ளாமல் தவிர்க்கும் பொழுது இந்த அமிலம் மற்றும் திரவம் செரிமானம் செய்ய உணவில்லாமல் நம் வயிற்றுப் பகுதிகளை அரிக்கத் தொடங்குகின்றது. இந்த காரணத்தினால் தான் அல்சர் எனப்படும் வயிற்றுப் புண் ஏற்படுகின்றது.

 

இந்த அல்சர் என்று அழைக்கப்படும் வயிற்றுப் புண்களை குணமாக்க என்னென்ன உணவுகளை சாப்பிட வேண்டும் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

 

வயிற்றுப் புண் குணமாக உண்ண வேண்டிய உணவுகள்..

 

* வயிற்றுப் புண் குணமாக நாம் நார்ச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். அதாவது ஆப்பிள், பேரிக்காய், ஓட்ஸ் போன்ற நார்ச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். நார்ச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை நாம் சாப்பிடும் பொழுது அமிலத்தின் அளவு குறைக்கப்படுகின்றது. அது மட்டுமில்லாமல் வயிற்று வலியையும் வீக்கத்தையும் குணமாக்குகின்றது.

 

* வைட்டமின் ஏ அதிகம் உள்ள சர்க்கரை வள்ளி கிழங்கை சாப்பிடலாம். இதை சாப்பிடும் பொழுது இதில் உள்ள வைட்டமின் ஏ சத்துக்கள் நமது வயிற்றில் உள்ள புண்களை ஆறச் செய்யும்.

 

வயிற்றுப் புண் உள்ளவர்கள் கீரை வகைகளை அதிகமாக உண்ண வேண்டும். கீரை வகைகளை உண்ணும் பொழுது நம் வயிற்றுக்கு குளிர்ச்சியை அளிக்கின்றது. மேலும் கீரை வகைகளில் வைட்டமின் ஏ சத்துக்கள் உள்ளது. இவை நம் வயிற்றில் உள்ள புண்களை ஆறச் செய்யும்.

 

* வயிற்றுப் புண் உள்ளவர்கள் அனைவரும் குடை மிளகாயை உணவில் அதிகளவு சேர்த்துக் கொள்ளலாம். குடை மிளகாயில் வைட்டமின் சி சத்துக்கள் அதிகளவில் இருப்பதால் இந்த குடை மிளகாய் வயிற்றுப் புண்களை ஆறச் செய்யும்.

 

* வயிற்றுப் புண்களை குணமாக்க வாழைப் பழமும் முக்கியமான உணவு பொருள் ஆகும். வாழைப் பழத்திலும் நார்ச்சத்துக்கள் அதிகளவு உள்ளது. இதனால் வயிற்றுப் புண்கள் உள்ளவர்கள் வாழைப் பழங்களை அதிகளவு சாப்பிடலாம்.

 

* வயிற்றுப் புண் உள்ளவர்கள் தயிரை அதிகளவில் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். தயிரில் லாக்டிக் அமிலமும், நல்ல பாக்டீரியாக்களும் உள்ளது. இவை இரண்டும் நம் வயிற்றில் உள்ள புண்களை ஆறச் செய்யும்.

 

* நெல்லிக்காயும் வயிற்றுப் புண்களை குணமாக்கும் அற்புதமான உணவுப் பொருளாகும். நெல்லிங்காயில் வைட்டமின் சி சத்துக்கள் உள்ளது. இது நம் வயிற்றுக்கு குளிர்ச்சியை கொடுக்கும். வயிற்றுப் புண்களை குணமாக்க நெல்லிக்காயை சாப்பிடலாம். அல்லது நெல்லிக்காய் ஜூஸ் குடிக்கலாம்.