சமையலில் வாசனைக்காக பயன்படுத்தபடும் கொத்தமல்லியில் இருக்கும் எக்கச்சக்க பயன்கள்..!

0
28

சமையலில் வாசனைக்காக பயன்படுத்தபடும் கொத்தமல்லியில் இருக்கும் எக்கச்சக்க பயன்கள்..!

தனியா என்று சொல்லப்படும் கொத்தமல்லி விதை மற்றும் அதன் இலைகளில் அடங்கியிருக்கும் மருத்துவ குணங்கள் ஏராளம்.இந்த கொத்தமல்லி இலையில் மெக்னீசியம்,இரும்புச்சத்து,கால்சியம்,வைட்டமின் ஏ,வைட்டமின் சி,வைட்டமின் கே,வைட்டமின் ஈ மற்றும் பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் இருக்கின்றன.

உணவில் நாம் கொத்தமல்லியை பயன்படுத்தி வந்தால் கண் பார்வை சம்மந்தப்பட்ட பிரச்சனை நீங்கும்.மேலும் செரிமான கோளாறு போன்ற பிரச்சனை உள்ளவர்கள் கொத்தமல்லியை உணவில் எடுத்து கொள்வது நல்லது.மேலும் வாயு பிரச்சனை,வயிற்று வலி போன்றவற்றை குணப்படுத்தும் மூலிகையாக கொத்தமல்லி செயல் படுகின்றது.

மேலும் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைத்து நல்ல கொழுப்பை உருவாக்குவதில் இவை முக்கிய பங்கு வகிக்கின்றது.மேலும் மலம் சார்ந்த பிரச்சனைகளுக்கு கொத்தமல்லி ஜூஸ் தீர்வாக அமைகின்றது.மேலும் இதனை பயன்படுத்துவதன் மூலம் இன்சுலின் சுரப்பை ஊக்குவித்து ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைகின்றது.மேலும் நுரையீரல்,வாய் மற்றும் தொண்டை புற்று நோய்களில் இருந்து நம்மை பாதுக்காப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றது.
மேலும் கொத்தமல்லி விதைகளில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட் மாதவிடாய் பிரச்சனைகளுக்கு உரிய தீர்வாக இருக்கின்றது.

மேலும் கால்சியம் சத்து அதிகம் கொண்டுள்ள கொத்தமல்லி உடலின் எலும்பு வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிப்பதுடன் எலும்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்க பெரிதும் உதவுகின்றது.மேலும் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் கொத்தமல்லி இலைகளை ஜூஸ் செய்து குடிப்பதினால் பசி உணர்வு குறைந்து விடும்.இந்த ஜூஸில் உள்ள ஆன்டி செப்டிக் வாய் புண்ணை குணப்படுத்த உதவுகிறது.கொத்தமல்லியை அன்றாட சமையலில் சேர்த்து உண்டு வந்தால் வாய் துர்நாற்றம் காலப்போக்கில் நீங்கிவிடும்.மேலும் உயர் ரத்த அழுத்த பிரச்சனைகளுக்கு இது நல்ல இயற்கை மருந்தாக உள்ளது.மேலும் இவற்றில் ஹீமோகுளோபின் உற்பத்திக்கு தேவையான இரும்பு சத்து அதிகமா இருக்கின்ற காரணத்தினால் ரத்த சோகை இருக்கும் நபர்கள் இந்த கொத்தமல்லி இலையை ஜூஸ் செய்து பருகுவது நல்லது.