இன்றைய காலத்தில் நிம்மதியான தூக்கத்தை அனுபபிப்பவர்கள் மிகவும் குறைவானவர்களே.மன அழுத்தம்,உடல் நலப் பிரச்சனை போன்ற காரணங்களால் தூக்கத்தை தொலைத்து வருகின்றனர்.இரவில் அதிக நேரம் மொபைல் பயன்படுத்துவதால் சிலருக்கு தூக்கம் இல்லாமல் போகிறது.
கடந்த காலங்களில் அதிகாலை நேரத்தில் எழும் பழக்கம் பெரும்பாலானவர்களிடம் இருந்தது.ஆனால் தற்பொழுது அலாரம் வைத்து எழுவது அதிகரித்து வருகிறது.அலாரம் இல்லாமல் எழுவது என்பது இன்றைய காலகட்டத்தில் முடியாத காரியமாகவே உள்ளது.
இப்படி அலாரம் வைத்து உறங்குவது நல்ல பழக்கம் இல்லை என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.தினமும் உங்களை அலாரம் எழுப்புகிறது என்றால் அது உங்களுக்கு மன அழுத்தத்தை கொடுத்துவிடும்.சிலருக்கு அலாரம் வைத்தாலும் எழ முடியாத நிலை ஏற்படும்.சிலர் அலார நேரத்தை அவ்வப்போது மாற்றி மாற்றி வைத்து தூக்க நேரத்தை அதிகப்படுத்துகின்றனர்.இது உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் ஒரு செயலாகும்.
இரவில் நேரம் கடந்து தூங்கினால் அதிகாலை நேரத்தில் ஆழ்ந்த நிலை தூக்கம் வரும்.இந்த நேரத்தில் அலாரம் சத்து கேட்டால் மன அழுத்தம்,டென்ஷன் போன்றவை ஏற்படும்.அதோடு அலாரம் வைத்து ஆழ்ந்த தூக்கத்தில் இருந்து எழுவதால் உடல் மற்றும் மன ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது.
இதனால் இதயம் சம்மந்தபட்ட பாதிப்புகள் அதிகமாக ஏற்படுகிறது.அதேபோல் பக்கவாதம்,சர்க்கரை நோய் போன்றவை ஏற்படக் கூடும்.ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் பொழுது அலாரம் வைத்து எழுவதால் மூளை நரம்பு ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது.அதேபோல் நாம் அதிக நேரம் தூங்கினாலும் நமது உடல் ஆரோக்கியம் மோசமாகிவிடும்.
எனவே இனி அலாரம் வைத்து எழும் பழக்கத்தை கைவிட வேண்டும்.அலாரம் இல்லாமல் எழும் பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும்.அதற்கு நாம் நேரமாக உறங்க வேண்டும்.நாம் எவ்வளவு சீக்கிரம் உறங்க செல்கின்றோமோ அந்த அளவிற்கு அதிகாலை நேரத்தில் எழ முடியும்.நேரமாக தூங்கும் பழக்கம் இருப்பவர்களுக்கு அலாரம் தேவையில்லை.