அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பிரச்சனை உள்ளவரா.. அதனை தடுக்க இந்த ஒரு காசாயம் மட்டும் குடிங்க!!

Photo of author

By Sakthi

அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பிரச்சனை உள்ளவரா.. அதனை தடுக்க இந்த ஒரு காசாயம் மட்டும் குடிங்க!!

Sakthi

Updated on:

 

அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பிரச்சனை உள்ளவரா.. அதனை தடுக்க இந்த ஒரு காசாயம் மட்டும் குடிங்க!!

சர்க்கரை நோய் இருப்பவர்கள் அடிக்கடி சிறுநீர் கழித்துக் கொண்டே இருப்பார்கள். அவ்வாறு சிறுநீர் கழிப்பதை கட்டுப்படுத்த இந்த பதிவில் அருமையான கசாயத்தை தயார் செய்து எவ்வாறு பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.

 

இந்த கசாயத்தை தயார் செய்ய தேவையான பொருட்கள்…

 

* கடல் அலிஞ்சல் – 15 கிராம்

* பருத்தி விதைகள் – 15 கிராம்

 

இந்த கசாயத்தை தயார் செய்யும் முறை…

 

எடுத்து வைத்துள்ள கடல் அலிஞ்சல் மற்றும் பருத்தி விதை இரண்டையும் சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பிறகு ஒரு லிட்டர் தண்ணீரில் இந்த இரண்டு பொருட்களையும் போட்டு நன்கு கொதிக்க வைக்க வேண்டும். இந்த 1 லிட்டர் தண்ணீர் 400 மிலி அளவு வரும் வரை இதை சுண்டக் காய்ச்ச வேண்டும். 400 மிலி அளவு ஆன பிறகு இதை வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.

வடிகட்டி எடுத்துக் கொண்ட இந்த கசாயத்தை காலை மாலை என இரண்டு வேலைகளிலும் 200 மிலி அளவு குடிக்கலாம்.

இந்த கசாயம் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும். மேலும் சர்க்கரை நோயால் அடிக்கடி வரும் சிறுநீரை கட்டுப்படுத்தவும் உதவுகின்றது.