இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருக்கின்றதா? நரம்புகள் தான் பாதிப்படைந்து வருகின்றது!
நம் உடலில் உள்ள நரம்புகள் பாதிப்படைந்து வருகிறது என்பதனை அறிந்து கொள்ளும் அறிகுறிகளை பற்றி இந்த பதிவு மூலம் காணலாம்.
பொதுவாக நரம்புகள் பாதிப்படைவதற்கு காரணம் காயம் அல்லது நோய் தொற்றுகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவினால் நரம்புகள் பாதிப்படையும்.
நரம்புகள் பாதிப்படையும் பொழுது நம் உடலில் சில அறிகுறிகள் தென்படும் அதனை பற்றி விரிவாக இந்த பதிவின் மூலம் காணலாம்.
எவ்வித காரணமும் இன்றி கை மற்றும் கால்களில் எரிச்சல் ஏற்படுவது இவ்வாறு ஏற்படுவதற்கான சருமத்தில் செல்லும் நரம்புகளின் செயல்பாட்டில் பாதிப்புகள் ஏற்படுவதன் காரணமாகும்.
கை கால் பகுதிகளில் உணர்வு இல்லாமல் அல்லது மரத்துப் போகுதல் இவை ஏற்படுவதற்கான காரணம் நரம்பு மண்டலங்கள் ஏற்படும் பாதிப்புகள் என அறியலாம்.இதனை மிக விரைவில் சரி செய்து கொள்ள வேண்டும். அவ்வாறு சரி செய்யவில்லை என்றால் உடல் பகுதியில் மற்ற உறுப்புகள் செயலிழந்து போய்விடும்.
எவ்வித காரணமும் இன்றி உடல் சோர்வாக இருத்தல் இதற்கான காரணம் நம் உடலில் பாக்டீரியாக்களின் தன்மை அதிகரித்து காய்ச்சல் ஏற்படுகிறது. இதன் விளைவாக நரம்பு மண்டலங்கள் சீராக செயல்படாத பொழுது உடல் சோர்வான நிலையில் இருக்கும்.
திடீரென தசைப்பிடிப்பு ஏற்படுவது நரம்பு பாதிப்படைவதற்கான அறிகுறிகள் ஆகும். இவை ஏற்படுவதற்கான காரணம் கடினமான வேலைகள் அல்லது நீண்ட நேரம் உடல் பயிற்சி செய்வதன் காரணமாக உடலில் நீர் தன்மை குறைவதால் இவ்வித தசை பிடிப்பு ஏற்படும். ஆனால் எவ்வித வேலையும் செய்யாத பொழுது திடீரென தசைப்பிடிப்பு ஏற்படுவது நரம்பு மண்டலங்களில் ஏற்படும் பாதிப்புகள் ஆகும்.
சீரற்ற இதயத்துடிப்பு இவை நரம்பு பாதிப்படைவதற்கான அறிகுறிகள் ஆகும். ஒருவருக்கு உடற்பயிற்சிக்குப் பிறகு சீரான இதயத்துடிப்பு இல்லாமல் மாற்றம் ஏற்படுவது சாதாரணமாகும். ஆனால் திடீரென்று இதயத்துடிப்பு கூடுவதோ அல்லது குறைவதோ நரம்பு பாதிப்படைவதற்கான முக்கிய காரணம்.