உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருக்கின்றதா? நரம்புத் தளர்ச்சி தான் உடனே கவனியுங்கள்!

Photo of author

By Parthipan K

உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருக்கின்றதா? நரம்புத் தளர்ச்சி தான் உடனே கவனியுங்கள்!

Parthipan K

உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருக்கின்றதா? நரம்புத் தளர்ச்சி தான் உடனே கவனியுங்கள்!

நம் உடலில் மிக முக்கிய உறுப்புகளில் ஒன்றாக இருப்பது நரம்புகள். அவ்வாறான நரம்புகளில் ஏற்படும் பிரச்சனைகளும், அதன் அறிகுறிகள் பற்றியும் இந்த பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம். நமக்கு மூளையிலிருந்து வரக்கூடிய செயல்திறன் அனைத்தும் முதலில் தண்டுவடத்திற்கு வரும்.

அதன் பிறகு தான் தண்டுவடத்தில் இருந்து நரம்புகள் வழியாக தசைகளுக்கு வருகின்றது. நரம்புகளில் மூன்று வகையான பிரிவுகள் இருக்கும். அதில் முதலாவதாக மூளையிலிருந்து நம்முடைய தசை இயக்கங்களுக்கு வரக்கூடியது. இரண்டாவதாக நம்முடைய உணர்ச்சிகளுக்கு வரக்கூடியவை.

அந்த நரம்பின் மூலம்தான் வெப்பநிலை உணர்ச்சிகள் போன்றவை ஏற்படும். மூன்றாவதாக உடம்பில் ஏற்படும் வேர்வை நம்முடைய நிறம் மாற்றம் அடைதல் போன்றவைகள் தான். சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த மூன்று நரம்புகளும் பாதிப்படையும்.ஒரே சமயத்தில் மூன்றும் பாதிப்படையும் அல்லது தனித்தனியாகவும் பாதிப்படையும்.

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படக்கூடிய காலில் ஊசி குத்துவது போல் உணர்வு, கால் எரிச்சல் கால் மறுத்து போதல் போன்றவை நாம் மேலே பார்த்தவாறு உணர்வு நரம்பின் பாதிப்பு தான். உணர்ச்சியால் உள்ளவர்களுக்கு நரம்பு தளர்ச்சி என மருத்துவர்கள் கூறுகின்றனர்.