உங்களுக்கு தூக்கமின்மை பிரச்சனையா? உடனடியாக இந்த பாலை குடியுங்கள்!

0
78

உங்களுக்கு தூக்கமின்மை பிரச்சனையா? உடனடியாக இந்த பாலை குடியுங்கள்!

பெரும்பாலானோர் தூக்கமின்மையில் தான் அவதிப்பட்டு வருகின்றனர். படுத்ததும் தூக்கம் வருகின்றது என்றால் அவர்கள் பாக்கியசாலி என கூறப்படுகின்றனர். தூக்கமின்மையால் உடலில் அதிக அளவு பாதிப்பு ஏற்படுகின்றன. நாம் படுத்தவுடன் தூக்கம் வரவேண்டும் அதற்கான ஆரோக்கியமான வழிமுறை பற்றி இந்த பதிவின் மூலம் காணலாம்.

முதலில் கசகசா எடுத்துக் கொள்ள வேண்டும். இவை பயன்படுத்துவதன் மூலம் நிம்மதியான தூக்கத்திற்கு வழிவகுக்கும். ஒரு டீஸ்பூன் எடுத்துக் கொள்ள வேண்டும். பத்து பாதாம் எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் அதனுடன் இரண்டு ஏலக்காய், ஐந்து மிளகு எடுத்துக் கொள்ள வேண்டும். இவை அனைத்தையும் நன்கு இடித்து பொடி செய்து கொள்ள வேண்டும்.

அதன் பிறகு ஒரு வானொலியில் ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றி நாம் எடுத்து வைத்துள்ள பொடியிலிருந்து ஒரு டீஸ்பூன் அளவு நெய்யுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும் அதன் பிறகு ஒரு டம்ளர் பால் எடுத்துக் கொதிக்க வைக்க வேண்டும். நன்கு கொதித்த பிறகு நாட்டு சர்க்கரை ஒரு டீஸ்பூன் அளவு சேர்த்து சிறிது நேரம் கொதிக்க வைக்க வேண்டும்.

அதன் பிறகு மிதமான சூட்டில் உணவு அருந்திய பிறகு அரை மணி நேரம் கழித்து குடிக்க வேண்டும். பிறகு 20 நிமிடங்கள் கழித்து உறங்க செல்லலாம். இவ்வாறு தொடர்ந்து மூன்று நாட்கள் குடித்து வர நல்ல மாற்றம் ஏற்படும்.

author avatar
Parthipan K