வெறும் 5 ரூபாய் செலவில் வெள்ளை முடியை கருப்பாக மாற்றலாம்… இவ்வாறு செய்து பாருங்க!!

0
94

 

வெறும் 5 ரூபாய் செலவில் வெள்ளை முடியை கருப்பாக மாற்றலாம்… இவ்வாறு செய்து பாருங்க…

 

தலையில் உள்ள வெள்ளை முடிகளை கருப்பாக மாற்ற 5 ரூபாய் செலவில் மருந்து தயார் செய்வது அதை எப்படி பயன்படுத்துவது என்று இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.

 

தற்போதைய காலத்தில் சத்து குறைபாடு காரணமாக தலையில் நரை முடி அதாவது வெள்ளை முடி வருவது சாதாரணமாகி விட்டது. இந்த நரை முடியை மறைக்க எல்லாரும் செயற்கை முறையிலான ஹேர் டை வாங்கி பயன்படுத்தி முடியை கருப்பாக மாற்றுகிறார்கள். முடிக்கு ஹேர் டை பயன்படுத்துவது தற்காலிக தீர்வை தரும். இதனால் சில நாட்களுக்கு பிறகு நம் நரை முடி செம்பட்டை முடியாக மாறிவிடும். பின்னர் அதற்கும் நாம் தனியாக ஹேர் டை வாங்கி பயன்படுத்தும் நிலைமை வரும். இந்த பதிவில் இயற்கை முறையில் ஹேர் டை தயாரித்து பயன்படுத்துவது எவ்வாறு என்று தெரிந்து கொள்ளலாம்.

 

இதற்கு தேவையான பொருள்கள்…

 

* சீகைக்காய் பொடி

* முட்டை

* தேங்காய் தொட்டியின் கரி

* விளக்கெண்ணெய் ஆயில்

* பேபி ஆயில்

 

செய்முறை…

 

முதலில் தேங்காய் தொட்டியை எரித்து அதன் கரியை எடுத்து பொடியாக்கி வைக்கவும். பின்னர் அதில் விளக்கெண்ணையை சேர்த்து நன்கு கலந்து கொண்டு பேஸ்ட் பதத்திற்கு தயார் செய்து வைத்துக் கொள்ளவும்.

 

பிறகு ஒரு பவுல் எடுத்து அதில் முட்டையை உடைத்து சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதில் இரண்டு பாக்கெட் சீகைக்காய் பொடியை சேர்த்துக் கொள்ளவும். பின்னர் இதை நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

 

பின்னர் இந்த பவுலில் நாம் ஏற்கனவே தயாரித்து வைத்துள்ள தேங்காய் கரியை இதில் சேர்த்துக் கொள்ளவும். பின்னர் இதையும் நன்கு கலந்து கொள்ள வேண்டும். கடைசியாக பேபி ஆயிலை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். வெள்ளை முடியை கருப்பாக மாற்றும் இயற்கை முறையிலான ஹேர் டை தயாராகி விட்டது.

 

இதை பயன்படுத்தும் முறை…

 

இந்த இயற்கை முறையிலான மருந்தை நீங்கள் தலையில் ஹேர் டை மருந்தை பயன்படுத்துவது போல பயன்படுத்தலாம். இந்த மருந்து தலை முடியில் மட்டுமே ஒட்டும். இதனால் இந்த மருந்தை தைரியமாக தயாரித்து வெள்ளை முடிகள் இருக்கும் இடங்களில் பயன்படுத்தலாம்.

 

Previous articleஉங்களுக்கு மருக்கள் இருக்கின்றதா… 50 பைசா செலவில் மருக்களை நீக்கலாம்…
Next articleஉங்கள் போன் நம்பரை கொடுக்கவே கொடுக்காதீங்க!! சொன்னது இதுக்குத்தான்!!