உங்களுக்கு ஒயிட் ஹேர் இருக்கிறதா? அப்போ இந்த பேஸ்டை தலைக்கு தேய்த்து குளித்தால் முடி அடர் கருமையாகும்!!
தலையில் உள்ள வெள்ளை முடியை கருமையாக மாற்ற கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆர்கானிக் ஹேர் டை பயன்படுத்துங்கள்.
தேவையான பொருட்கள்:-
1)வெந்தயம்
2)கற்றாழை ஜெல்
3)கருவேப்பிலை
4)வெங்காயச் சாறு
5)அவுரி பொடி
செய்முறை:-
ஒரு ஸ்பூன் வெந்தயம் மற்றும் ஒரு கொத்து கறிவேப்பிலையை வாணலியில் போட்டு கருப்பாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
இதை மிக்ஸி ஜாரில் போட்டு மைய்ய அரைத்துக் கொள்ளவும்.அதன் பின்னர் ஒரு துண்டு கற்றாழையை தோல் நீக்கி அதன் ஜெல்லை மட்டும் தனியாக பிரித்து எடுத்துக் கொள்ளவும்.
4 சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து சாறு பிழிந்து வைத்துக் கொள்ளவும்.
பிறகு ஒரு கிண்ணம் எடுத்து அதில் அரைத்த வெந்தயம் + கறிவேப்பிலை பொடியை சேர்க்கவும்.பிறகு ஒரு தேக்கரண்டி அவுரி இலை பொடி சேர்த்து மிக்ஸ் பண்ணவும்.
அதன் பின்னர் கற்றாழை ஜெல் மற்றும் வெங்காய சாற்றை ஊற்றி பேஸ்ட் போல் கலக்கி கொள்ளவும்.இந்த பேஸ்டை தலை முழுவதும் முடிகளின் வேர் பகுதியில் படும்படி தடவி ஒரு மணி நேரத்திற்கு ஊற விடவும்.
இவை ஆர்கானிக் என்பதினால் தலைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.ஒரு மணி நேரம் கழித்து மைல்டான ஷாம்பு பயன்படுத்தி தலையை அலசிக் கொள்ளவும்.
வாரம் இருமுறை இவ்வாறு செய்து வந்தால் தலையில் உள்ள வெள்ளை முடி அனைத்தும் கருமையாக மாறும்.