காலையில் வெறும் வயிற்றில் சீரகத் தண்ணீர் குடித்தால் எவ்வளவு நன்மை கிடைக்கும்ன்னு தெரியுமா?

0
100
#image_title

காலையில் வெறும் வயிற்றில் சீரகத் தண்ணீர் குடித்தால் எவ்வளவு நன்மை கிடைக்கும்ன்னு தெரியுமா?

இயற்கை நமக்கு அளித்துள்ள ஏராளமான கொடைகளில் ஒன்று சீரகம். சீரகத்தில் எண்ணற்ற மருத்துவ பலன்கள் உள்ளன. சீரகம் உடலில் உள்ள நீர்சக்தியினை தக்க வைத்து கழிவுகளை சீராக்கி வெளித் தள்ளும் ஆற்றல் கொண்டது. மேலும், சீரகத் தண்ணீரில் அதிக அளவு இரும்பு சத்தும் நார்ச்சத்தும் உள்ளன.

உடலின் உஷ்ணத்தை குறைத்து குளிர்ச்சியாக வைக்கவும் சீரகம் உதவி செய்கிறது. வாசனைப் பொருளாக மட்டும் பயன்படுத்துவதில்லை சீரகம், ரசம், குழம்பு மற்றும் தாளிப்புகள் அசைவ உணவுகளில் முக்கிய பங்கு வகிக்கிறது.

சரி வாங்க வெறும் வயிற்றில் சீரகத் தண்ணீர் குடித்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்ப்போம் –

1 காலையில் வெறும் வயிற்றில் சீரகத் தண்ணீர் குடித்தால், அதில் உள்ள நார்ச் சத்து உள்ளதால் மலச் சிக்கலை குணப்படுத்தும்.

2 காலையில் வெறும் வயிற்றில் சீரகத் தண்ணீர் குடித்தால், ரத்த அழுத்தத்தை குறைக்கும்.

3 காலையில் வெறும் வயிற்றில் சீரகத் தண்ணீர் குடித்தால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவி செய்யும்.

4 வெறும் வயிற்றில் சீரகம் கலந்த தண்ணீரை குடித்து வந்தால், முகம், கூந்தல் அழகுக்கும் மற்றும் உடல் ஆரோக்கியம் பெறுமாம்.

5 காலையில் வெறும் வயிற்றில் சீரகம் கலந்த தண்ணீரை குடித்து வந்தால், அஜீரணத்தில் இருந்து நிவாரணம் அளிக்கும். வயிற்றுவலிக்கும் தீர்வு தரும்.

6 காலையில் வெறும் வயிற்றில் சீரகம் கலந்த தண்ணீரை குடித்து வந்தால், சர்க்கரையின் அளவை குறைக்கும்.

7 காலையில் வெறும் வயிற்றில் சீரகம் கலந்த தண்ணீரை குடித்து வந்தால், இருதயத்தில் தங்கி இருக்கும் சளியை அகற்றும்.

8 காலையில் வெறும் வயிற்றில் சீரகம் கலந்த தண்ணீரை குடித்து வந்தால், இரத்த அணுக்களை உருவாக்குவதிலும், இரத்த ஓட்டத்தில் ஆக்ஸிஜன் கொண்டு செல்லும் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும்.

 

 

 

Previous articleவிநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்.. ருசியான பிடி கொழுகட்டை சுலபமாக செய்யும் முறை!!
Next articleமகளிர் உரிமைத் தொகை விவகாரம் : சர்ச்சையில் சிக்க வைத்த தந்தி டிவி!!.