புரட்சி தலைவர் வாரி வழங்கும் வள்ளலாக உருவெடுத்த சுவாரஸ்ய கதை தெரியுமா?
தமிழ் திரையுலக ஜாம்பவானாக ரசிகர்களால் கொண்டாடி தீர்க்கப்பட்ட எம்ஜிஆர் அவர்கள் கருணை உள்ளம் கொண்டவர், தவற்றை தட்டி கேட்கும் துணிச்சல் கொண்டவர் மற்றும் நல்ல தலைவராக தனது இறுதி மூச்சு வரை வாழ்ந்தார்.
புரட்சி தலைவர், அள்ளி கொடுத்து சிவந்த கைகள், கொடை வள்ளல், இதயக் கனி என்று தமிழக மக்களின் மனதில் இன்று வரை நீங்கா இடம் பிடித்து இருக்கும் எம்ஜிஆர் அவர்கள் வாரி வழங்கும் வள்ளலாக உருவெடுக்க ஒரு மூதாட்டி தான் காரணம் என்று சொன்னால் நம்ப முடிகிறதா?
எம்ஜிஆர் அவர்கள் திரையுலகிற்குள் நுழைவதற்கு முன் அவரது குடும்பத்தில் வறுமை தலைவிரித்து ஆடியது. ஒருவேளை ஆகாரத்திற்கே கஷ்டம் என்ற நிலையில் அவரது குடும்பச் சூழ்நிலை இருந்தது.
வறுமை மற்றும் நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தால் சென்னையில் உள்ள ஒரு நாடக கம்பெனியில் சேர்ந்து சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தார்.
எப்பொழுதும் சிறுசுறுப்பாக திகழ்ந்த எம்ஜிஆர் தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்வதை வழக்கமாக கொண்டிருந்தார். நடைப்பயிற்சிக்கு தனது நண்பர்களையும் அழைத்து செல்லும் பழக்கம் கொண்டிருந்த அவர் யானை கவுனி பகுதியில் ஒரு மூதாட்டி விற்பனை செய்யும் புட்டு தினமும் வாங்கி நண்பர்களுடன் பகிர்ந்து சாப்பிட்டு வந்துள்ளார்.
தினமும் புட்டு வாங்கும் எம்ஜிஆர் ஒருநாள் வாங்காமல் சென்று இருக்கிறார். இதனை கவனித்த பாட்டி ஏன் பா இன்னைக்கு புட்டு வாங்காம போற? என்ற கேட்டு இருக்கிறார். அதற்கு அவரும் தயங்கியபடி காசு இல்ல பாட்டி என்று சொல்லவே சற்று யோசிக்காமல் உன்னிடம் காசு இருக்கும் போது கொடுப்பா என்று பாட்டி சொல்லி இருக்கிறார்.
முன் பின் தெரியாத என்னிடம் காசு வாங்காமல் புட்டு குடுக்குறீங்க. ஒருவேளை நான் காசு கொடுக்கலாம் உங்களை ஏமாற்றி விட்டால்? என்று பாட்டியிடம் கேட்டு இருக்கிறார்.
அதற்கு பாட்டி நீ காசு கொடுக்கலான அதை எண்ணி நான் வருந்த மாட்டேன். என்னுடைய தர்ம கணக்கில் அது சேர்ந்துவிடும் என்று கூறினார். மறுநாள் தவறாமல் புட்டுக்கான பணத்தை கொடுத்து விட்டார் எம்ஜிஆர்.
வயதான பாட்டியின் இறக்க குணம், அனுபவ வார்த்தை தான் பின்னாளில் எம்ஜிஆர் வாரி வழங்கும் கொடை வள்ளலாக உருவெடுக்க காரணமாக அமைந்தது. தன்னை நாடி உதவி என்று ஓடி வரும் நபர்களுக்கு மட்டும் இன்றி உதவி தேவைப்படும் நபர்களுக்கும் பராசபட்சமின்றி அள்ளிக் கொடுக்கும் வள்ளலாக காட்சி அளித்தார்.