தினமும் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் நெய் செய்யும் அதிசயம் என்னென்ன தெரியுமா??

0
190
#image_title
தினமும் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் நெய் செய்யும் அதிசயம் என்னென்ன தெரியுமா??
பாரம்பரிய மருத்துவ முறைகளான ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவத்தில் மருந்தாக பயன்படுத்தப்படும் நெய் முக்கியப் பங்கினை வகிக்கின்றது. இனிப்பு உணவுகளிலும், மற்ற உணவுகளிலும் நெய்யை சேர்ப்பது அதன் சுவைக்காகவும் மற்றும் நெய்யின் மருத்துவ குணங்களும் தான் காரணம்.
இந்த நெய்யானது எப்படி நமக்கு கிடைக்கின்றது என்றால் முதலில் பாலை நன்றாக காய்ச்சி அதை ஆறவைத்து அதனுடன் சிறிதளவு தயிர் சேர்ப்பார்கள். பிறகு இதை 8 மணிநேரம் ஊறவைத்தால் பால் முழுவதும் தயிராக மாறிவிடும். இதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பருப்பை மத்தை வைத்து கடையும் பொழுது பாலில் உள்ள சத்துக்கள் ஒன்றாக சேர்ந்து வெண்ணெய் கிடைக்கும். இந்த வெண்ணெயை காய்ச்சும் பொழுது நமக்கு நெய் கிடைக்கும்.
இந்த நெய்யை சாப்பிடுவதால் கொழுப்புச் சத்துக்கள் அதிகரிக்கும் என்று மக்கள் நினைக்கும் நிலையில் இந்த நெய்யானது கெட்ட கொழுப்புகளை கரைக்கும் என்று எத்தனை பேருக்கு தெரியும் என்று தெரியவில்லை. அன்றாடம் நம் உணவில் ஒரு ஸ்பூன் நெய்யை சேர்த்து சாப்பிடும் பொழுது நம் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
நெய்யின் நன்மைகள்…
* நெய்யை நாம் உணவில் சேர்த்து சாப்பிடும் பொழுது நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். எந்தவித நோய்க் கிருமிகளும் நம் உடலுக்குள் செல்ல விடாமல் காக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை நெய் அதிகரிக்கின்றது. இந்த நோய் எதிர்ப்பு மண்டலத்தில் கில்லட்டி என்ற செல் உள்ளது. நெய் இந்த செல்லை தூண்டிவிட்டு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றது.
* நெய்யை நாம் உணவில் சேர்த்து சாப்பிடும் பொழுது செரிமாணம் சீராகும். நெய்யில் உள்ள பியூடேரிக் அமிலம் உணவு செரிமாணம் அடைவதற்கு உதவி செய்கின்றது. இதன் மூலம் செரிமாணக் கோளாறு சரி செய்யப்படுகின்றது. அது மட்டுமில்லாமல் வயிறு உப்புசம். அஜீரணம், தொடர் ஏப்பம் போன்ற பிரச்சனைகளும் சரியாகின்றது. வயிற்றில் உள்ள நல்ல பாக்டீரியாக்களின் அளவை அதிகரித்து குடலை பாதுகாக்கின்றது. பசி உணர்வு அதிகராக்கும்.
* தினமும் நெய்யை அளவாக உணவில் சேர்த்து சாப்பிடுவதால் எலும்பு தேய்மானம் அடைவதை தடுக்கலாம். வயதானவர்களுக்கு ஏற்படும் மூட்டு வலி, மூட்டு வீக்கம், மூட்டு தேய்மானம் போன்ற பிரச்சனைகள் சரி செய்யப்படுகின்றது. தினமும் ஒரு ஸ்பூன் நெய்யை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி, வீக்கம் எல்லாம் குறையும்.
* தினமும் நெய்யை அளவோடு சாப்பிட்டு வந்தால் கண்பார்வை அதிகரிக்கும். நெய்யில் வைட்டமின் ஏ சத்து அதிகளவு உள்ளது. இது கண் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. கண் பார்வை மங்கலாக இருப்பவர்கள் தினமும் ஒரு ஸ்பூன் நெய்யை உணவில் சேர்த்துக் கொண்டால் கண்பார்வை திறன் மேம்படும். கண்கள் சம்பந்தமான பிரச்சனைகள் எதுவும் ஏற்படாது.
* இந்த நெய் நமது மூளையின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. மூளையானது முழுவதுமே கொழுப்பால் ஆனது. நெய்யை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் மூளைக்கு தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கும். முக்கியமாக மூளையில் புதிய செல்கள் உற்பத்தியாக இது உதவியாக இருக்கும். மற்றும் மூளை சுறுசுறுப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.
* நெய்யை நாம் உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் எடையை இது குறைக்கும். நெய்யில் வைட்டமின் ஏ, கே, டி, இ போன்ற சத்துக்களும், செராவூட்டப்பட்ட சத்துக்களும் இருப்பதால் உடலில் இருக்கும் கொட்ட கொழுப்புகள் கரைந்து வெளியேறி உடல் எடை குறையும். அதிக உடல் எடை உடையவர்கள் தினமும் ஒரு ஸ்பூன் நெய்யை உணவில் சேர்த்து சாப்பிட்டு வரலாம்.
* நெய்யை நாம் தினமும் சாப்பிடுவதால் நம் இருதயத்திற்கு இது நல்லதாக இருக்கின்றது. நெய்யில் ஆண்டிஆக்சிடன்ட் சத்துக்கள், கொலஸ்ட்ராலை கரைக்கும் வைட்டமின் சத்துக்களும் அதிகளவு உள்ளது. நெய்யை உணவில் சேர்த்து சாப்பிடும்பொழுது கெட்ட கொழுப்புகள் கரைந்து நல்ல கொழுப்புகள் அதிகரிக்கின்றது. இதனால் இருதய நோய் வராமல் தடுக்கப்படுகின்றது. மேலும் இதயம் நன்கு பலமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.
* நெய்யை தீக்காயங்களுக்கு களிம்பாக பயன்படுத்தி வந்தால் காயம் மற்றும் காந்தல் குறையும்.
Previous articleஇந்த 2 பொருளை மட்டும் சாப்பிடுங்கள்!! இனி சாகும் வரை ஒரு முடி கூட கொட்டாது!!
Next articleஇனி கண்ணாடி தேவையில்லை!! கழுகு போல பார்வை தெரிய இந்த கீரை ஒன்றே போதும்!!