‘தளபதி 69’ திரைப்படத்தில் நடிகர் விஜய்யின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

0
342
#image_title

‘தளபதி 69’ திரைப்படத்தில் நடிகர் விஜய்யின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘கோட்’ என்னும் திரைப்படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகி வரும் இப்படத்தில் விஜய் இரட்டை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தில் அஜ்மல் அமீர், யோகிபாபு, பிரபுதேவா, ஸ்னேகா, லைலா, மோகன், பிரசாந்த், மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஏ.ஜி.எஸ்.என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்காக விஜய் ரூ.200 கோடி சம்பளம் வாங்கியுள்ளார் என்று தெரிகிறது.

இந்த திரைப்படத்தில் நடித்து முடித்த பின்னர் அவர் முழுநேர அரசியலில் ஈடுபடப்போவதாக அண்மையில் கூறியுள்ளார். தமிழக வெற்றிக்கழகம் என்னும் கட்சியினை துவங்கியுள்ளார். அடுத்த சட்டப்பேரவை தேர்தலில் இக்கட்சி தீவிரமாக களமிறங்கவுள்ளது. இந்நிலையில், விஜய் கடைசியாக நடிக்கவுள்ள இப்படத்தினை ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்பட தயாரிப்பாளர் டிவிவி தனய்யா தயாரிக்கிறார்.

இந்த படத்தினை இயக்க இயக்குனர் எச்.வினோத், தெலுங்கு இயக்குனர் த்ரிவிக்ரம், இயக்குனர் ஸ்ரீனிவாஸ் உள்ளிட்ட 3 இயக்குனர்கள் கதை சொல்லியதாக தெரிகிறது. அதில் எச்.வினோத் சொல்லிய கதையில் நடிகர் விஜய் நடிக்க ஒத்துக்கொண்டுள்ளார். இப்படத்திற்கு விஜய்க்கு வரியுடன் சேர்த்து ரூ.250 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

Previous articleமதுபோதையில் போலீஸ் நடத்திய துப்பாக்கி சூட்டில் பலியான ஆசிரியர் – உத்தரப்பிரதேசத்தில் பரபரப்பு சம்பவம்!!
Next articleதேங்காய் எண்ணெய் + 2 பொருள் இருந்தால் சொட்டை தலையில் முடி வளர வைக்க முடியும்!!