இந்த உலகில் ஒரு வருடத்திற்கு இவ்வளவு உணவு வீணாகிறதா?? தெரிந்து கொள்ளுங்கள்!!

Photo of author

By CineDesk

இந்த உலகில் ஒரு வருடத்திற்கு இவ்வளவு உணவு வீணாகிறதா?? தெரிந்து கொள்ளுங்கள்!!

இந்த உலகில் பலர் தாங்க இடம் இன்றியும், உண்ண உணவு இன்றியும் தனது அன்றாட வாழ்வை நடத்த பெரும் கஷ்டத்தில் உள்ளனர். இந்த நிலையில் நம்மில் பலர் ஹோட்டலுக்கு சென்றாலோ அல்லது வீட்டில் உள்ள உணவுகளையே வீணாக்குவது வணக்கம் வழக்கம். ஆனால் அப்படி நாம் ஒரு வருடத்தில் வீணாகும் உணவின் அளவு எவ்வளவு இருக்கும் என்று தெரியுமா?

இந்த உலகில் ஒவ்வொரு வருடமும் ஒன் பில்லியன் மெட்ரிக் டன் உணவுகள் வீன் ஆகிறதாம். இந்த செய்தி ஷாக்காக இருக்கிறதா? ஆம் இந்த அளவை துல்லியமாக கணக்கிட 2019ஆம் ஆண்டு ஆரம்பித்துள்ளார்கள். இதை 2019ஆம் ஆண்டு யுனைட்டட் நேஷன்ஸ் பொறுப்பாக எடுத்துக்கொண்டு உலக நாடுகளில் உள்ள அனைத்து இடங்களிலும் எவ்வளவு உணவு வீணாகிறது என்று கணக்கிட முடிவு செய்தார்களாம். அப்படி எடுத்த கணக்கில் ஒரு வருடத்தில் உலகில் ஒரு மில்லியன் மெட்ரிக் டன் உணவுகள் வீணாகிறது என்ற அதிர்ச்சி தகவலையும் கண்டுபிடித்துள்ளனர்.

மேலும் இந்த ஆராய்ச்சியில் 61 சதவீத உணவுகள் நமது வீடுகளில் இருந்தும்,  மேலும் அதற்கு அதிகமாக 26 சதவீத உணவு உணவகங்களில் இருந்தும், மீதமுள்ள 13 சதவிகித உணவுகள் சூப்பர் மார்க்கெட்டில் இருந்தும் வீணாகி உள்ளதை  யுனைட்டட் நேஷன் கண்டுபிடித்துள்ளது. இவர்கள் 2019 ஆம் ஆண்டு ஆரம்பித்த இந்த ஆராய்ச்சிக்கான முடிவை 2021 ஆம் ஆண்டு தான் வெளியிட்டுள்ளனர். மேலும் இந்த செய்தி உலக அளவில் உள்ள மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீங்களும் உங்கள் வீட்டில் மீதமாகும் உணவுகளை எடுத்து எரியாமல் உங்கள் வீட்டின் அருகில் உள்ள விலங்குகளுக்கு அல்லது உணவு இல்லாமல் இருப்பவர்களுக்கு கொடுத்து உதவுங்கள்.