உங்கள் உடலில் இந்த இடத்தில் பல்லி விழுந்தால் என்ன நடக்கும் என்று தெரியுமா!!

Photo of author

By Divya

உங்கள் உடலில் இந்த இடத்தில் பல்லி விழுந்தால் என்ன நடக்கும் என்று தெரியுமா!!

Divya

Updated on:

உங்கள் உடலில் இந்த இடத்தில் பல்லி விழுந்தால் என்ன நடக்கும் என்று தெரியுமா!!

பொதுவாக நம் அனைவரது வீட்டில் பல்லி நடமாட்டம் என்பது சாதாரண ஒன்று தான். வீட்டில் பல்லி சத்தமிடுதல், பல்லி நம் மேலே விழுதல் போன்றவை நம் நன்மைக்கே.

வீட்டு பூஜை அறையில் பல்லியை கண்டால் செல்வந்தர்களாகும் யோகம் உண்டாகும். ஏதேனும் ஒரு நல்ல காரியத்தை பற்றி விவாதிக்கும் பொழுது சத்தமிட்டால் அவை நல்ல சகுனமாக பார்க்கப்படுகிறது.

அதேபோல் பல்லி நம் மீது விழுந்தால் பல யோகம் கிடைக்கும் என்று சாஸ்திரம் சொல்கிறது. உங்கள் கண் புருவத்தில் பல்லி விழுந்தால் பண வரவு அதிகரிக்கும்.

நெற்றியில் பல்லி விழுந்தால் நினைத்த காரியங்களில் வெற்றி உண்டாகும். தங்களது வலது கண் பக்கத்தில் பல்லி விழுந்தால் நல்லது நடக்கும். காதில் பல்லி விழுந்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும். மார்பு பகுதியில் பல்லி விழுந்தால் தன வரவு உண்டாகும். காலில் பல்லி விழுந்தால் தொழில் சார்ந்த பயணம் மேற்கொள்ள வாய்ப்பு கிடைக்கும். கையில் பல்லி விழுந்தால் அரசாங்க உத்தியோகம் கிடைக்கும் என்று அர்த்தம். எனவே இனி தங்கள் மீது பல்லி விழுந்தால் அச்சம் கொள்ளாமல் இருங்கள்.