காலை, மதியம், இரவு சாப்பிடுவதற்கு சரியான நேரம் என்ன தெரியுமா?

0
46
#image_title
காலை, மதியம், இரவு சாப்பிடுவதற்கு சரியான நேரம் என்ன தெரியுமா?
காலை, மதியம், இரவு என்று மூன்று வேலைகள் ஒரு மனிதன் ஒரு நாளுக்கு உணவு உண்ண வேண்டும். அவ்வாறு மூன்று வேளைகள் உணவு உண்பதற்க்கு சரியான நேரம் என்ன என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
உணவு என்பது அனைவருக்கும் அடிப்படையான தேவைகளில் ஒன்றாகும். இந்த உணவுக்காக ஒவ்வொருவரும் உழைக்கின்றனர். அவ்வாறு உழைப்பதற்கும் ஆற்றல் வேண்டும். அந்த ஆற்றல் உணவில் இருந்து தான் கிடைக்கின்றது.
இந்த உணவை மேற்குறிப்பிட்டவாறு ஒரு மனிதன் ஒரு நாளுக்கு மூன்று வேளைகள் மட்டும் தான் சாப்பிட வேண்டும். அவ்வாறு மூன்று வேளை சாப்பிடாமல் இருந்தாலோ அல்லது அளவுக்கு அதிகமாக சாப்பிட்டாலோ பல பிரச்சனைகள் ஏற்படும்.
அதே போல உணவை சரியான நேரத்திற்கு சாப்பிட வேண்டும். மேலும் ஒவ்வொரு வேளை உணவுக்கும் இடையில் சரியான இடைவெளி இருக்க வேண்டும். இவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
உணவு உற்பத்திக்கு சரியான நேரம்…
ஒரு மனிதன் ஒரு நாளுக்கு மூன்று வேளை அதாவது காலை, மதியம், இரவு என்று மூன்று வேளைகள் சாப்பிட வேண்டும்.
அவ்வாறு காலையில் ஒரு மனிதன் 7 மணியில் இருந்து 8 மணிக்குள் உண்ண வேண்டும். மேலும் காலை உணவை 10 மணிக்குள் சாப்பிட வேண்டும். பத்து மணிக்கு மேல் சாப்பிடக்கூடாது.
அதே போல மதிய உணவு 12.30 மணியில் இருந்து 2 மணிக்குள் சாப்பிட வேண்டும். காலை உணவை போலவே மதிய உணவை மாலை 4 மணிக்குள் சாப்பிட வேண்டும். 4 மணிக்கு மேல் மதிய உணவை சாப்பிடக்கூடாது.
அதே போல ஒவ்வொரு நபரும் இரவு உணவை மாலை 6 மணியில் இருந்து 8 மணிக்குள் சாப்பிட்டு விட வேண்டும். அதே போல இரவு 10 மணிக்கு மேல் சாப்பிடக்கூடாது.
ஒவ்வொரு வேளை உணவுக்கு இடையிலும் குறைந்தது 4 அல்லது 5 மணி நேரம் இடைவெளி இருக்க வேண்டும். மேலும் தூங்கி எழுந்ததும் 1 மணி நேரத்திற்குள் சாப்பிட வேண்டும். அதே போலீஸ் தூங்கச் செல்வதற்கு 2 மணி நேரத்திற்கு முன்னதாக சாப்பிடக்கூடாது.