100 கோடி வசூலை வாரி குவித்த முதல் தமிழ் திரைப்படம் எது தெரியுமா? வயதானாலும் வசூலில் மட்டும் குறைவைக்காத நடிகர்!!

Photo of author

By Divya

100 கோடி வசூலை வாரி குவித்த முதல் தமிழ் திரைப்படம் எது தெரியுமா? வயதானாலும் வசூலில் மட்டும் குறைவைக்காத நடிகர்!!

இன்றைய காலகட்டத்தில் ஒரு படம் வெளியாகி 30 நாட்கள் ஓடுவதே பெரும் போராட்டமாக இருக்கிறது.மாஸ் ஹீரோக்களாக இருந்தாலும் கதை நன்றாக இருந்தால் மட்டுமே ரசிகர்களிடம் இருந்து வரவேற்பு கிடைக்கிறது.

ரசிகர்கள் மத்தியில் கிடைக்கும் அமோக வரவேற்பு மற்றும் பட வசூல் இவை இரண்டும் தான் ஒருவரை மாஸ் ஹீரோவாக உருவாக்குகிறது.தற்பொழுது வெளியாகும் படங்கள் ரூ.500 கோடி,ரூ.600 கோடி என்று வசூலை வாரி குவிப்பது சாதனையாக இருக்கும் நிலையில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் ரூ.100 கோடி வசூலை ஈட்டுவது என்பது இமாலய சாதனையாக இருந்தது.

தமிழ் திரைத்துறையில் ரூ.50 கோடி வசூல் செய்த முதல் திரைப்படம் கில்லி என்பது அனைவரும் அறிந்த ஒன்று.ஆனால் ரூ.100 கோடி வசூல் செய்த முதல் தமிழ் திரைப்படம் எதுவென்று தெரியுமா?

பிரமாண்ட இயக்குநர் சங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ‘சிவாஜி’.இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ஸ்ரேயா,வில்லனாக சுமன்,காமெடி கதாபாத்திரத்தில் விவேக் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான இப்படம் மாபெரும் வெற்றி பெற்று பாக்ஸ் ஆபிசில் ரூ.150 கோடி வரை வசூல் செய்து சாதனை புரிந்தது.இதுவே ரஜினி அவர்களின் திரை வாழ்க்கையில் ரூ.150 கோடி வசூல் செய்த முதல் திரைப்படமாகும்.

கிட்டத்தட்ட ரூ.60 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட இப்படம் ரூ.152 கோடி வரை வசூல் செய்தது அன்றைய தமிழ் திரைத்துறையில் சாதனையாக பார்க்கப்பட்டது.இப்படமே ரூ.100 கோடி வசூலை கடந்த முதல் தமிழ் திரைப்படம் ஆகும்.அதுமட்டுமின்றி இப்படத்தின் வசூல் வெற்றி மூலம் ரஜினி அவர்கள் அதிக சம்பளம் பெறும் இந்திய நடிகர்களில் ஒருவரானார்.

மேலும் சிவாஜி படத்தில் வரும் “சும்மா அதிருதில்ல”,”கண்ணா பன்னிங்க தான் கூட்டமா வரும் சிங்கம் சிங்கிளா தான் வரும்” என்ற ரஜினியின் பேமஸ் டயலாக்ஸ் இன்று வரை ரசிகர்களின் பேவரைட் டயலாக்குகளில் ஒன்றாக இருக்கிறது.