என்னால் அப்படி செய்ய முடியவில்லையே.. விஜய்யின் இந்த செயலை கண்டு புலம்பிய சூப்பர் ஸ்டார்!! 

0
132
Superstar was surprised to see Vijay's action
Superstar was surprised to see Vijay's action

என்னால் அப்படி செய்ய முடியவில்லையே.. விஜய்யின் இந்த செயலை கண்டு புலம்பிய சூப்பர் ஸ்டார்!!

நடிகர் விஜய் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக முத்திரை பதிக்க அவரது கடந்த கால விடா முயற்சி மற்றும் தோல்விகளால் கிடைத்த வலிமைகளே காரணம்.இன்று விஜய்க்கு என்று லட்சக்கணக்கில் ரசிகர் கூட்டம் உருவாக காரணம் அவரின் கடின உழைப்பு.

இயக்குநரின் மகன் என்ற காரணத்தினால் தான் பட வாய்ப்புகள் கிடைக்கிறது.இந்த மூஞ்சியெல்லாம் ஹீரோவா என்ற பல அவமானங்களை விஜய் தனது ஆரம்பகால திரைப் பயணத்தில் சந்தித்தார்.ஆரம்ப கட்டத்தில் விஜய்யின் நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் தோல்விகளையே சந்தித்தது.

தன்னை சிறந்த நடிகனாக நிலைநிறுத்த போராடிக் கொண்டிருந்த விஜய்க்கு 1996 ஆம் ஆண்டு வெளியான “பூவே உனக்காக” படத்தின் மூலம் அங்கீகாரம் கிடைத்தது.அதன் பின்னர் லவ் டுடே,நேருக்கு நேர்,காதலுக்கு மரியாதை,துள்ளுவதோ இளமை,குஷி என்று காதல் படங்களில் நடித்து பெண் ரசிகைகளின் கவனத்தை ஈர்த்தார்.

தொடர்ந்து காதல் கதை படங்களில் நடித்து வந்த விஜய் 2003 ஆம் ஆண்டு வெளியான “திருமலை” படத்தின் மூலம் ஆக்ஷன் ஹீரோவாக தோன்றினார்.ரசிகர்களும் விஜய் அவர்களின் ஆக்ஷன் ஹீரோ அவதாரத்தை ஆதரித்தனர்.இதன் வெளிப்பாடாக விறுவிறுப்பான கதைக்களம் கொண்ட கில்லி படத்தில் நடிக்க விஜய்க்கு உத்வேகம் கிடைத்தது.

விஜய்யின் திரைப்பயணத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்ற பெருமை கில்லி படத்தை தான் சாரும்.கோபம்,ஆக்ரோஷம்,வீரம் நிறைந்த விஜய்யை திரையில் காட்டி மக்களை கொண்டாட வைத்தார் இயக்குநர் தரணி.

கில்லி ரீமேக் படம் என்றால் யாரும் நம்ப மாட்டார்கள்.தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் ஒக்கடு படத்தின் ரீ மேக் தான் கில்லி.ஒரிஜினல் படத்தை விட ரீமேக் படத்திற்கு ஏகோபோக வரவேற்பு கிடைத்தது.

படத்தில் இடம் பெற்றிருந்த “அர்ஜுனரு வில்லு” பாடல் இன்று வரை பலரின் ஆல் டைம் பேவரைட்டாக இருந்து வருகிறது.தனது சரவணவேலு கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்து நடித்து இருக்கும் விஜய்யின் நடிப்பை பார்த்து மகேஷ் பாபுவே ஆச்சரியப்பட்டு இருக்கிறார்.

தன்னுடைய ஒக்கடு படத்தை விட கில்லி படம் சிறப்பாக இருக்கிறது.ஒவ்வொரு காட்சிகளும் ரியலாக இருக்கிறது.படத்தில் விஜய் உண்மையான கபடி வீரரை போலவே நடித்து அசத்தி இருக்கிறார்.விஜய்யின் இந்த அர்ப்பணிப்பை பார்க்க பூரிப்பாக இருக்கிறது.ஆனால் விஜய் அளவிற்கு நாம் ஒக்கடு படத்தில் அர்ப்பணிப்புடன் நடிக்கவில்லையோ என்று கில்லி படம் ரிலீஸான நேரத்தில் மகேஷ் பாபு புலம்பி இருக்கிறார்.

இந்நிலையில் 20 ஆண்டுகளுக்கு பிறகு தற்பொழுது கில்லி ரீ ரிலீஸ் செய்யப்பட்டு ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.ரீ ரிலீஸ் செய்யப்பட்ட படங்களில் அதிக வசூலை ஈட்டிய படம் என்ற சாதனையை கில்லி படைத்துள்ளது.