துருவ் விக்ரம் நடிக்கும் படத்திற்கு இசையமைப்பாளர் யார் தெர்யுமா?? வெளியான நியூ அப்டேட்!!

0
42
Do you know who is the music director for the film starring Dhruv Vikram?? New update released!!
Do you know who is the music director for the film starring Dhruv Vikram?? New update released!!

துருவ் விக்ரம் நடிக்கும் படத்திற்கு இசையமைப்பாளர் யார் தெரியுமா?? வெளியான நியூ அப்டேட்!!

துருவ் விக்ரம் நடிப்பில் இறுதியாக வெளிவந்த படம் மகான் இதில் அவர் தன் அப்பாவான சியான் விக்ரம் அவர்களுடன் இணைந்து நடித்திருப்பார்.

இவர் முதல் படமான ஆதித்ய வர்மாவில் புது விதமான நடிப்பை வெளிபடுத்தி இருப்பார்.இந்த படம் வெற்றியடைந்ததை அடுத்து இவருக்கு ஒரு ரசிகர் கூட்டமே இருக்கிறது.

இதனை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க இருக்கின்றார். இந்த படம் முழுவதுமாக விளையாட்டை அடிப்படையாக கொண்டு எடுக்கப்படுகின்றது. அதற்காக அவர் தயாராகி கொண்டு  இருக்கிறார் என்று கூறப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் இவர்  சமீபத்தில் வெளியான ‘டாடா” திரைப்பட இயக்குனர் கணேஷ் கே பாபு அவரின் இயக்கத்தில் தனது அடுத்த படத்தை நடிக்க உள்ளார்.

கணேஷ் கே பாபு ஒரு அறிமுக இயக்குனர் இவர் எடுத்த டாடா படம் பெரிய அளவில் வெற்றியடைந்தது.இந்த படம் இளைஞர்களிடைய குறிப்பாக கல்லூரி மாணவர்களிடையே பெரிய அளவில் பேசப்பட்டு அவர்களை கவரும்படி அமைந்தது.

இதனை தொடர்ந்து இவர்களின் கூட்டணி எவ்வாறு இருக்கும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தநிலையில் இந்த படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைக்க உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

இதனை தொடர்ந்து இப்படத்தின் எதிர்பார்ப்புகள் ரசிககளிடையே அதிக அளவில் ஆர்வத்தை கிளப்பி உள்ளது. இந்த படம் துருவ் விக்ரமிற்கு ஒரு திருப்புமுனையாக அமையும் என்று கூறப்படுகிறது. மேலும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

author avatar
Parthipan K