நூடுல்ஸ் என்றால் அலாதி பிரியமா? அப்போ இதை கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்!!

Photo of author

By Divya

நூடுல்ஸ் என்றால் அலாதி பிரியமா? அப்போ இதை கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்!!

இன்றைய நவீன உலகில் உணவு முறையில் அதிகளவு மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது. பணம் இல்லையென்றால் வாழ்க்கை இல்லை என்ற சூழல் ஏற்பட்டு விட்டதால் காலில் சக்கரத்தை கட்டியதை போல் அனைவரும் ஓடிக் கொண்டிருக்கிறோம்.

இதனால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தாமல், நிம்மதியான தூக்கம் இல்லாமால் வேலை, வேலை என்று ஓடும் நிலை ஏற்பட்டு விட்டது. குடும்பத்தில் ஆண், பெண் இருவரும் வேலைக்கு செல்லும் நிலை ஏற்பட்டு விட்டதால் சமைக்க கூட நேரம் இல்லாமல் ஹோட்டலில் வாங்கி உண்பது, குறைந்த நிமிடத்தில் தயாராகக் கூடிய நூடுல்ஸ் உள்ளிட்ட உணவுகளை உண்பதை வழக்கமாக்கி கொண்டதனால் உடல் ஆரோக்கியம் கெடும் நிலை உருவாகி இருக்கிறது.

குழந்தைகள் விரும்பி உண்ணும் ஜங்க் புட்டில் இந்த நூடுல்ஸ் முக்கிய இடத்தை பிடிக்கிறது. இந்த நூடுல்ஸ் உணவு 2 நிமிடத்தில் தயாராகி விடும், சாப்பிட அதிக ருசியுடன் இருக்கும் என்று கண்ணை கவரும் விளம்பரங்களை காட்டி விற்கப்பட்டு வருகிறது.

தினமும் நூடுல்ஸ் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் தீமைகள்:-

*பெரும்பாலான நூடுல்ஸ் வகைகள் மைதாவை மூலப் பொருளாக கொண்டு தயாரிக்கப்படுகிறது. இந்த நூடுல்ஸில் நார்ச்சத்துக்களும், புரோட்டீன்களும் மிக குறைவாக இருப்பதினால் உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவைக்க கூடியவையாக இருக்கின்றது.

*தினமும் நூடுல்ஸ் சாப்பிடுவதால் உடல் எடை விரைவில் அதிகரிக்கும். இதனால் உடலில் பல்வேறு நோய் பாதிப்புகள் உருவாகத் தொடங்கும்.

*அடிக்கடி நூடுல்ஸ் செய்து சாப்பிடுவதால் குமட்டல், தலைவலி போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

*நூடுல்ஸ் உணவு இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அதிகரிக்கும் அபாயத்தை கொண்டிருக்கிறது. இதனால் சர்க்கரை நோய் வருவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது.

*தொடர்ந்து நூடுல்ஸ் உணவு அதிகளவில் எடுத்து வந்தோம் என்றால் விரைவில் மலச்சிக்கல் பாதிப்பு ஏற்படும். இந்த மலச்சிக்கல் பாதிப்பால் மலக்குடல் புற்றுநோயக மாற அதிக வாய்ப்பு இருக்கிறது.

*மாரடைப்பு, இரத்த அழுத்தம் உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்தும் அபாயம் இந்த நூடுல்ஸில் உள்ளது.

*இந்த மைதா நூடுல்ஸ் வயிறு ஆரோக்கியத்தை கெடுக்கும் என்பதினால் கர்ப்பிணி பெண்கள் இதை உண்பதை தவிர்க்க வேண்டும்.

*ஒரு சில நூடுல்ஸ் வகைகள் ஒட்டாமல் இருப்பதற்காக மெழுகு அல்லது லிக்விட் பாரஃபின் சேர்க்கப்படுகிறது. இவை உடல் ஆரோக்கியத்திற்கு பெரும் தீங்கு இழைக்கக் கூடியவை ஆகும்.