இரவு நேரத்தில் அடிக்கடி சிறுநீர் கழிக்கிறீர்களா? இது தான் காரணம்.. கவனமா இருங்க!!

Photo of author

By Divya

இரவு நேரத்தில் அடிக்கடி சிறுநீர் கழிக்கிறீர்களா? இது தான் காரணம்.. கவனமா இருங்க!!

உறக்கம் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் முக்கியமான ஒன்று.உடலுக்கு ஓய்வு கொடுத்தால் தான் அவை சீராக இயங்கும்.ஆனால் இரவு நேரத்தில் தான் பெரும்பாலானோர் மொபைல் பயன்படுத்துகின்றனர்.அதேபோல் துரித உணவுகளை அதிகம் சாப்பிடுவது,தேவையற்ற விஷயங்களை சிந்திப்பது போன்ற விஷயங்களை செய்வதினால் தூக்கம் தொலைகிறது.

அதேபோல் இரவு நேரத்தில் அதிகளவு நீர் அருந்தினால் அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடும்.இதனால் தூக்கம் பறிபோகும்.சிலருக்கு தண்ணீர் அருந்தமலையே இரவில் அடிக்கடி சிறுநீர் கழிப்பார்கள்.இவை உடலில் நோய் பாதிப்பு இருப்பதை உணர்த்துகிறது.

இரவு நேரத்தில் உடலிலுள்ள அதிகளவு குளுக்கோஸை வெளியேற்றும் வேலையை சிறுநீரகம் செய்கிறது.இதனால் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்படும்.இது சர்க்கரை நோய்க்கான அறிகுறிகள் ஆகும்.எனவே இரவு நேரத்தில் நீர் அருந்தாமலேயே அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்பட்டால் மருத்துவரை அணுகுவது நல்லது.

அதேபோல் சிறுநீர் பாதையில் தொற்று,கிருமிகள் தேங்கி இருந்தால் இரவு நேரத்தில் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் நிலை உருவாகும்.சிறுநீரில் துர்நாற்றம் வீசுவது,சிறுநீர் கழிக்கும் பொழுது இடுப்பு பகுதியில் வலி ஏற்படுவது,சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஆகியவை சிறுநீரகத்தில் தொற்று இருப்பதை உணர்த்துகிறது.இதுபோன்ற அறிகுறிகள் தென்பட்டால் ஆரம்ப நிலையிலேயே சரி செய்து கொள்வது நல்லது.சிறுநீர் பையில் அதிகளவு திரவம் தங்கினால் அவை சிறுநீர் கழிக்கும் உணர்வை ஏற்படுத்தும்.எனவே இரவு நேரத்தில் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் நிலை ஏற்பட்டால் தாமதிக்காமல் மருத்துவரை அணுகுவது நல்லது.