நிலாவை போல முகம் பொலிவாக வேண்டுமா!!? அதற்கு சாப்பாட்டுக் கஞ்சி போதும்!!!
நிலாவை போல நமது முகத்தை பொலிவடைய வைக்க என்ன செய்ய வேண்டும் என்ன பொருள் பயன்படுத்த வேண்டும் என்பதை பற்றி எல்லாம் இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
முகத்தை பொலிவாக மாற்றுவதற்கு எத்தனையோ ஆங்கில மருந்துகள் உள்ளது. ஆங்கில மருந்துகள் பொதுவாக உடனடியாக தேவையான தீர்வு தரும். ஆனால் பாதிப்புகள் மெல்ல மெல்ல தெரியும். ஆனால் இயற்கையான முறையில் வீட்டு மருத்துவ முறைகளை பயன்படுத்தும் பொழுது தீர்வு மெல்ல மெல்ல கிடைக்கும். மேலும் பாதிப்புகள் இருக்காது.
நம்முடைய முகத்தை பொலிவாக்க சாப்பாடு வடிகட்டும் கஞ்சியை நாம் பயன்படுத்தலாம். அதாவது அரிசி ஊற வைத்த தண்ணீரை நாம் பயன்படுத்தும் பொழுதே நமது சருமத்திற்கு பல நன்மைகள் கிடைக்கும். இதில் சாப்பாடு வடிகட்டிய கஞ்சியை சருமத்திற்கு பயன்படுத்தலாம்.
தற்பொழுதைய காலத்தில் அனைவருடயை வீட்டிலும் குக்கர் என்ற கலாச்சாரம் வந்து விட்டது. இதில் சாப்பாடு செய்து சாப்பிடும் பொழுது நமது உடலுக்கு பல பாதிப்புகளை ஏற்படுத்தும். ஆனால் அதுவே மண் பானை அல்லது ஈயப் பாத்திரம் மூலமாக சாப்பாடு செய்யும் பொழுது நாம் சாப்பாட்டை வடிகட்டுவோம். அப்பொழுது இந்த கஞ்சி நமக்கு கிடைக்கும்.
சாதாரணமாக நாம் சாப்பாடு வடிகட்டிய கஞ்சியை சருமத்திற்கு பயன்படுத்தும் பொழுது முகம் பொலிவாகத் தொடங்கும். மேலும் இந்த சாப்பாடு கஞ்சியுடன் இன்னும் சில பொருட்களை சேர்த்து நாம் முகத்திற்கு சாப்பாடு கஞ்சி ஃபேஸ் பேக் போடலாம். இதற்கு தேவையான பொருட்கள் என்ன எவ்வாறு தயாரிப்பது என்பது பற்றி பார்க்கலாம்.
முகத்தை பொலிவாக்க தேவையான பொருட்கள்…
* சாப்பாடு கஞ்சி
* கடலை மாவு – ஒரு தேக்கரண்டி
* கஸ்தூரி மஞ்சள் – ஒரு தேக்கரண்டி
செய்முறை…
ஒரு பவுல் ஒன்றை எடுத்து கஸ்தூரி மஞ்சள் மற்றும் கடலை மாவு இரண்டையும் சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் இதில் தேவையான அளவு சாப்பாடு வடிகட்டிய கஞ்சியை சேர்த்து நன்கு குறைத்துக் கொள்ள வேண்டும். இதோ சருமத்தை பொலிவாக்கும் மருந்து தயாராகி விட்டது.
இதை எடுத்து அப்படியே முகத்திற்கு ஃபோஸ் பேக்காக பயன்படுத்தலாம். இதை வாரத்திற்கு இரண்டு முறை நம் முகத்திற்கு பயன்படுத்தலாம்.
இந்த சாப்பாடு கஞ்சியானது சருமத்திற்கு மட்டுமல்லாமல் மேலும் பல நன்மைகளை தருகின்றது. சாப்பாடு கஞ்சி நம் தலை முடிக்கு பல நன்மைகளை தருகின்றது. தலைமுடியை மிருதுவாக மாற்றித் தருகின்றது. முகத்தில் இருக்கும் முகப்பருக்களை சாப்பாடு கஞ்சி மறையச் செய்கின்றது. மேலும் பல சரும பிரச்சனைகளுக்கும் மருந்தாக இந்த சாப்பாடு கஞ்சி பயன்படுகின்றது.