கரு கரு தலைமுடி வேண்டுமா? அப்போ இந்த இலையை அரைத்து சாப்பிட்டு வாருங்கள்!!
தலை முடி கருமையாக இருந்தால் அவை நம் அழகை கூட்டும்.எனவே இயற்கையான முறையில் தலை முடியை கருமையாக்க கறிவேப்பிலையில் சட்னி செய்து சாப்பிட்டு வாருங்கள்.
தேவையான பொருட்கள்:-
1)கறிவேப்பிலை
2)தேங்காய் துருவல்
3)எண்ணெய்
4)உளுந்து
5)கடலை பருப்பு
6)உப்பு
7)கடுகு
8)வர மிளகாய்
செய்முறை:-
முதலில் ஒரு கப் அளவு கறிவேப்பிலையை ஒரு கிண்ணத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.
பிறகு 1/4 மூடி அளவு தேங்காயை துருவி வைத்துக் கொள்ளவும்.அதன் பின்னர் அடுப்பில் ஒரு வாணலி வைத்து 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
பிறகு 1/2 தேக்கரண்டி உளுந்து பருப்பு,1/2 தேக்கரண்டி கடலை பருப்பு போட்டு பொரிய விடவும்.பிறகு ஒரு கப் கறிவேப்பிலை,3 வர மிளகாய் போட்டு பச்சை வாடை நீங்கும் வரை வதக்கவும்.
அதன் பின்னர் துருவிய தேங்காயை போட்டு,தேவையான அளவு உப்பு சேர்த்து இரண்டு நிமிடங்களுக்கு வதக்கி அடுப்பை அணைக்கவும்.இந்த கலவையை நன்கு ஆறவிட்டு ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி மைய்ய அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
பின்னர் அடுப்பில் ஒரு தாளிப்பு கரண்டி வைத்து ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.பிறகு கடுகு,2 வர மிளகாயை கிள்ளி போட்டு பொரிய விட்டு அரைத்த கறிவேப்பிலை சட்னியில் போட்டு கலந்து கொள்ளவும்.இந்த சட்னியை அடிக்கடி செய்து சாப்பிட்டு வந்தால் முடி அடர் கருமையாக வளரும்.