வாக்காளர் பட்டியலில் திருத்தம் வேண்டுமா?? இதோ தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!
வாக்காளர் வரைவு பட்டியல் வருகின்ற அக்டோபர் மாதம் வெளியிடப்பட இருப்பதால் பட்டியலில் பெயர் சேர்க்க திருத்தம் செய்ய வாக்காளர்கள் விண்ணப்பிக்கலாம் என தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல் படி 1.1.2024-ஐ தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு மேற்கொள்ளப்பட உள்ளது.
இதையடுத்து அக்டோபர் 17 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. அதைதொடர்ந்து அக்டோபர் 17 முதல் நவம்பர் 30 வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம்,ஆதார் இணைப்பு போன்றவற்றை மேற்கொள்ளலாம்.
திருத்தம் செய்யப்பட்ட இறுதி வாக்களர் பட்டியல் அடுத்த ஆண்டு 2024 ஜனவரி மாதம் அன்று வெளியிடப்படும். வாக்காளர் உதவி கைபேசி செயலி மற்றும் இணையதள முகவரி www.voters.eci.gov.in, https://voterportal.eci.gov.in ஆகியவற்றின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
மேலும் 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 1.1.2024, 1.4.2024, 1.7.2024 மற்றும் 1.10.2024 ஆகிய தேதிகளில் விண்ணப்பிக்கலாம்.
மேலும் வெளிநாட்டில் வாழும் இந்திய குடிமக்கள் தங்களது பெயரை சேர்க்க சம்பந்தப்பட்ட வாக்குபதிவு அலுவலரிடம் நேரிலோ அல்லது தபால் மூலமோ விண்ணப்ப படிவத்தை அளிக்கலாம். அடுத்ததாக இடம் பெயர்தல், திருத்தம், வாக்காளர் அட்டை தொலைந்து போதல் ஆகியோரும் மாற்று அட்டை பெற விண்ணப்பிக்கலாம் என தலைமை தேர்தல் அதிகாரி கூறியுள்ளார்.