இளமையிலும், முதுமையிலும் எலும்பு பிரச்சனை வராமல் இருக்க வேண்டுமா?? அப்படி என்றால் கட்டாயம் இது உங்களுக்குத்தான்!!

0
127

இளமையிலும், முதுமையிலும் எலும்பு பிரச்சனை வராமல் இருக்க வேண்டுமா?? அப்படி என்றால் கட்டாயம் இது உங்களுக்குத்தான்!!

நம் தினசரி வாழ்க்கையில் மிகவும் பிஸியாக இருப்பதால், ஆரோக்கியத்தை கண்டு கொள்ளாமல் இருக்கிறோம். சரியான உணவு பழக்கம் இல்லாமல் இருந்தால் உடல் பலவீனமடைய ஆரம்பிக்கிறது.

எலும்புகளில் மீது யாரும் கவனம் செலுத்துவதில்லை. எலும்பு பலவீனம் ஆகும் போது தான் அதற்கான வழிமுறைகளை தேடுகிறோம். எலும்புகள் ஆரோக்கியமாக இருப்பதற்கு சில செயல்களை செய்யாமல் இருப்பது அவசியமானதாகும்.

எலும்புகள், தசைகளில் வலி ஏற்படும். எலும்புகள் வலுவிழந்து போவதும் இதற்குக் காரணம். இந்த மாதிரி நேரத்தில் நாம் செய்யும் தவறுகளை கவனித்து மாற்றி கொள்ள வேண்டும்.

ஒருவரின் ஆரோக்கியமான வாழ்விற்கு அவர்களின் உடல் உறுப்புகள் அனைத்தும் சீராக செயல்பட வேண்டியது அவசியமாகும். ஆரோக்கியம் என்று வரும்பொழுது அதில் எலும்புகளின் ஆரோக்கியம் என்பது மிகவும் முக்கியானதாகும். ஏனெனில் நமது உடலுக்கு சரியான வடிவத்தை கொடுப்பது நமது எலும்புகள்தான்.

ஒருவரின் வலிமை என்பது அவர்களின் எலும்புகள் எந்த அளவிற்கு வலிமையாக இருக்கிறது என்பதை பொறுத்துதான் தீர்மானிக்கப்படுகிறது. ஆனால் காலப்போக்கில் எலும்புகளில் தேய்மானம் ஏற்படுவதால் எலும்புகளில் பலவீனம் ஏற்படுகிறது.

இவ்வாறு எலும்புகள் பலவீனம் அடைவதை உங்களின் சில தினசரி செயல்கள் தடுக்கக்கூடும். இந்த பதிவில் எலும்புகளை பாதுகாக்க நீங்கள் தினமும் செய்ய வேண்டியது என்னென்ன என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

நெய்

கசகசா

தாமரை விதை

பனங்கற்கண்டு

செய்முறை

1: முதலில் ஒரு பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

2: பின்பு இவற்றில் நான்கு அல்லது ஐந்து ஸ்பூன் கசகசாவே சேர்த்து மிதமான சூட்டில் பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும்.

3: இவற்றுடன் ஒரு கப் தண்ணீர் கலக்காத பாலை சேர்த்துக் கொள்ள வேண்டும். அதனை நீங்கள் நன்றாக கொதிக்க விட வேண்டும்.

4: அதன் பிறகு தாமரை விதையை எடுத்துக் கொள்ள வேண்டும் இந்த தாமரை விதை உங்களுக்கு நாட்டு மருந்து கடைகளிலும் மளிகை கடைகளிலும் ஆன்லைன் ஷாப்பிங் போன்றவற்றில் மிக எளிமையாக கிடைக்கும்.

5: இந்த தாமரை விதைகள் கருப்பு நிறத்தில் இருக்கும் இதனை நீங்கள் வெண்மை நிறம் வரும் வரை பொறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

6: கொதித்த அந்த பாலில் இந்த தாமரை விதைகளை சேர்த்து மிதமான சூட்டில் சிறிது நேரம் வைக்க வேண்டும்.

7:பிறகு ஒரு கிளாசில் இதனை மாற்றி விட வேண்டும்.

இதனை நீங்கள் இரவு சாப்பிட்டபின் சிறிது நேரம் கழித்து இந்த பாலை குடித்துவிட்டு உறங்க வேண்டும்.

இவ்வாறு வாரத்திற்கு மூன்று முறை தொடர்ந்து செய்து வந்தால் எலும்பு பலவீனம் ,மூட்டு வலி, உடல் சோர்வு போன்ற அனைத்து பிரச்சனைகளையும் எளிதாக சரி செய்து விடலாம்.

 

 

Previous articleமுகப்பருவாள் முகத்தை காட்ட தயங்குகிறீர்களா?? கவலை வேண்டாம் எளிமையான இந்த ஃபேஸ் பேக் போதும்!!
Next articleகர்ப்பிணி பெண்களுக்கு ஹீமோகுளோபின் அதிகரிக்க வேண்டுமா? இதோ இதை மட்டும்  கொடுங்கள் போதும்!!