கர்ப்பிணி பெண்களுக்கு ஹீமோகுளோபின் அதிகரிக்க வேண்டுமா? இதோ இதை மட்டும்  கொடுங்கள் போதும்!! 

0
53

கர்ப்பிணி பெண்களுக்கு ஹீமோகுளோபின் அதிகரிக்க வேண்டுமா? இதோ இதை மட்டும்  கொடுங்கள் போதும்!!

இரத்த சோகை என்பது இரத்தத்திலுள்ள சிவப்பணுக்களின் இருக்கும் ஹீமோகுளோபின் என்ற புரதம் ஆகும். ஹீமோகுளோபின் ஆக்சிஜனை நுரையீரலிருந்து உடல் முழுவதும் கொண்டு செல்கிறது. ஆக்சிஜன் மனித உயிருக்கும் முக்கியமான ஒன்றாகும். ஹீமோகுளோபின் குறைபாடு வந்தால் உடல் சீராக இருக்காது மற்றும் பல்வேறு பிரச்சினை உண்டாகும். ஹீமோகுளோபின் குறைபாடு வராமல் இருக்க கால்சியம் இரும்புச்சத்து போன்றவை மிக முக்கியமான ஒன்றாகும்.

இதனை கவனிக்காமல் விடுவதால் கடுமையான இரத்த சோகை நோய் உண்டாகும்.மேலும் சைவ உணவைக் காட்டிலும் அசைவ உணவில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. எனவே இரும்புச்சத்து நிறைந்துள்ள உணவுகளை நாம் எடுத்துக் கொள்வது ஹீமோகுளோபினை அதிகரிக்கும்.

ரத்தசோகை ஏற்படும் காரணங்கள் அவை

இரும்பு சத்து குறைபாடு காரணமால் ரத்தசோகை ஏற்படும்.

புற்றுநோய், சக்கரை நோய், கல்லீரல் பாதிப்பு, மஞ்சல் காமாலை, மலேரியா, டெங்கு இதுபோன்ற பிரச்சினைகள் இருந்தா கூட ரத்த சோகை ஏற்படும்.

இந்த ரத்த சோகை ஆண்களை விட பெண்களுக்கு தான் அதிகமாக வரும்.

குழந்தைகளுக்கும் இரத்த சோகை பிரச்சனை ஏற்படும்.

ரத்த சோகை காண அறிகுறிகள்:

உடல் சோர்வடையும்.

தொடர்ந்து கொட்டாவி வரும்.

ரத்த சோகை முத்தினால் கண்கள் எல்லாம் வெளுத்திருக்கும். கை கால் நகங்கள் ரத்தம் இல்லாமல் வெளுத்திருக்கும்.

முடி கொட்டும் மற்றும் சுருக்கம் வரும்.

ரத்த சோகை பிரச்சனை இருப்பவர்கள் உணவு முறையில் கவனம் செலுத்த வேண்டும் அவர்களுக்கு இரும்பு சத்து அதிகமாக தேவைப்படும். அவை

1.பேரிச்சம்பழம்

2. கீரை வகைகள்

3. பிரக்கோலி

4. நாட்டுக்கோழி

5. நாட்டுக்கோழி முட்டை

6. வேர்க்கடலை

7. பயிறு வகைகள்

8. மீன் மற்றும் உலர்ந்த திராட்சை.

தேவையான பொருட்கள்

தண்ணீர்

முருங்கைக் கீரை

கருவேப்பிலை

நெல்லிக்காய் பொடி

தேன்

செய்முறை

பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைக்க வேண்டும். அதன்பின் முருங்கைக் கீரையை அதில் சேர்த்து கொள்ளவேண்டும். மேலும் அதனுடன் கருவேப்பிலை சேர்த்து நன்கு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். அதனை வடிகட்டி டீ போன்று எடுத்துக்கொள்ள வேண்டும். அதன் பின் நெல்லி காய் பொடியை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவேண்டும். மேலும் அதனுடன் தேன் சேர்த்துக் கொள்ளவேண்டும்.

இதனை காலையில் சாப்பிட்ட பின் குடித்து வந்தால் இரும்புச்சத்து குறைபாடு ஏற்படாது. மேலும் குறிப்பாக 30 வயது மேல் கால்சியம் சத்து குறைவாக இருக்கும் இதனால் இதுபோன்று செய்து குடித்து வந்தால் உடல் சோர்வு ஹீமோகுளோபின் குறைபாடு போன்றவை ஏற்படாது. இது மட்டுமின்றி புது இரத்தம் அதிகரிக்க உதவுகிறது. மேலும் முருங்கைக் கீரை மற்றும் கருவேப்பிலையில் இரும்புச்சத்து உள்ளதால் கண் பார்வை உடல் சோர்வு போன்றவை குணமாகும். நெல்லிக்காய் பொடியில் விட்டமின் சி இருப்பதால் உடல் வலி போன்றவை ஏற்படாது.

author avatar
Jeevitha