உடல் சோர்வு நீங்கி பாய் போட்டு படுத்த அடுத்த நிமிடம் நிம்மதியான ஆழ்ந்த தூக்கம் வர வேண்டுமா? 

Photo of author

By Amutha

உடல் சோர்வு நீங்கி பாய் போட்டு படுத்த அடுத்த நிமிடம் நிம்மதியான ஆழ்ந்த தூக்கம் வர வேண்டுமா? 

சிலருக்கு படுத்த உடன் தூக்கம் வந்துவிடும். அவர்கள் உண்மையில் வரம் பெற்றவர்கள் தான். இரவில் 7 லிருந்து 8 மணி நேரம் தூங்கினால்தான் உடல் ஆரோக்கியமாக இருக்கும். உடல் நலக் கோளாறுகளுக்கு தூக்கமின்மை ஒரு முக்கிய காரணம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

விழித்திருக்கும் போது நம்முடைய புலன்களும் விழிப்படைந்த நிலையில் இருக்கும். தூங்கினால் தான் நம் உடல் உறுப்புக்களுக்கும், புலன் உணர்வுக்கும் சிறிது ஓய்வு கிடைக்கும். தூக்கமின்மையால் அவதிப்படும் பலருக்கு நாளாக ஆக சோர்வும் மன அழுத்தமும் ஏற்பட்டு பாதிப்புக்குள்ளாவார்கள். தூக்கமின்மை பிரச்சனையை ஆரம்பத்திலேயே சரி செய்ய வேண்டும். இல்லையெனில் இது பக்கவாதம் மாரடைப்பு போன்ற தீவிர பிரச்சனைகளை ஏற்படுத்தி விடும்.

இத்தகைய பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க படித்த உடன் நிம்மதியான ஆழ்ந்த உறக்கம் வர இந்த பானத்தை குடித்து வந்தாலே போதும்.

இதற்கு முதலில் எடுத்துக் கொள்ளும் பொருள் கசகசா. இருக்கின்ற கல்லில் ஒரு ஸ்பூன் கசகசாவை எடுத்துக் கொள்ள வேண்டும். அடுத்து அதில் பத்து பாதாம் பருப்புகளை போடவும். கூடவே 2 ஏலக்காய், 5 மிளகு சேர்க்கவும். இதை நன்றாக கல்லில் இடித்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து ஒரு ஸ்பூன் நெய் சேர்க்கவும். அதில் இடித்து வைத்த பொடியில் இருந்து ஒரு ஸ்பூன் எடுத்து லேசாக வறுக்கவும். அடுத்து இதில் ஒரு டம்ளர் பாலை ஊற்றி நன்கு கொதிக்க விடவும். பால் கொதிந்ததும் ஒரு ஸ்பூன் நாட்டு சர்க்கரை சேர்த்து கரைந்ததும் இறக்கி லேசாக ஆறியதும் டம்ளரில் ஊற்றி அப்படியே குடிக்கவும். பொதுவாக இதனை இரவு உணவு முடிந்து அரை மணி நேரம் கழித்து குடிக்கவும். உங்களுக்கு நிம்மதியான உறக்கம் கட்டாயம் வரும்.