சளித் தொல்லை நீங்க வேண்டுமா! அப்போது தேங்காய் எண்ணெய் டீ குடிங்க !!

Photo of author

By Sakthi

சளித் தொல்லை நீங்க வேண்டுமா! அப்போது தேங்காய் எண்ணெய் டீ குடிங்க
மழை காலம் வந்துவிட்டாலே அனைவருக்கும் ஏற்படும் முக்கியமான பிரச்சனை சளி ஆகும். இந்த சளிப் பிரச்சனையை சரி செய்வதற்கு முறையான மருத்துவ முறைகளை கையாள வேண்டும். ஒரு சிலர் மருத்துவரிடம் செல்வார்கள். ஒரு சிலர் தானாக மருந்துக் கடைகளுக்கு சென்று மருந்து மாத்திரையை வாங்கி சாப்பிடுவார்கள்.
இன்னும் ஒரு சிலர் தங்களுக்கு தெரிந்த வீட்டு வைத்திய முறைகளை பயன்படுத்துவார்கள். ஆனால் சளி என்பது நிரந்தரமாக குணமாகாத ஒரு பிரச்சனையாக பலருக்கும் இருக்கும். அந்த வகையான நபர்கள் இந்த தேங்காய் எண்ணெய் டி தயார் செய்து குடித்தால் சளித் தொல்லை சரியாகும்.
இந்த தேங்காய் எண்ணெய் டீ தயார் செய்வதற்கு பெரிதாக செய்முறையோ அல்லது பொருட்களோ தேவையில்லை. நாம் சாதாரணமாக பயன்படுத்தும் தேங்காய் எண்ணெய் மற்றும் குடிக்க பயன்படுத்தும் டீ போதுமானது.
முதலில் நாம் குடிக்க டீ தயார் செய்து கொள்ள வேண்டும். அதன் பின்னர் சூடாக இருக்கும் டீயில் ஒரே ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்க்க வேண்டும். பின்னர் இதை கலந்து விட்டு ஒரே மடக்காகக் குடித்துவிட வேண்டும். இவ்வாறு செய்தால் சளித் தொல்லை குணமாகும்.
மேலும் இந்த தேங்காய் எண்ணெய்யை நமக்கு சளி பிடித்திருக்கும் நேரத்தில் மூக்கின் உள்ளே தேங்காய் எண்ணெயை தடவி அதே போல மூக்கின் வெளியே தடவினால் போதும். சளித் தொல்லை நீங்கும்.