உங்கள் உடலில் விட்டமின் பி9 சத்தை அதிகரிக்க வேண்டுமா!!? அப்போ இந்த உணவுகளை எடுத்துக் கொள்ளுங்க!!!
நமது உடலில் விட்டமின் பி9 சத்து குறைந்தால் பல தீமைகள் வந்து சேரும். இதனால் விட்டமின் பி9 சத்தை நம் உடலில் குறையாமல் பாதுகாப்பது முக்கியமாகும். இந்த பதிவில் விட்டமின் பி9 சத்து எந்தெந்த உணவுகளில் அதிகம் உள்ளது என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம்.
நமது உடலுக்கு விட்டமின் பி9 சத்து மிகவும் அவசியமான ஒரு ஊட்டச்சத்து ஆகும். உடலில் விட்டமின் பி9 சத்து குறைந்தால் உடலில் ஹீமோகுளோபின் அளவு குறைந்து பலவீனம் ஏற்படும். தலைவலி, வாய்ப்புண், மூச்சு விடுவதில் சிரமம் போன்ற பல தீமைகளை நமது உடலுக்கு அளிக்கின்றது.
இதில் இருந்து விடுபட வேண்டும் என்றால் நாம் உடலில் வைட்டமின் பி9 சத்தை குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு வைட்டமின் பி9 சத்து அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். இந்த பதிவில் விட்டமின் பி9 அதிகம் உள்ள உணவுகள் பற்றி பார்க்கலாம்.
விட்டமின் பி9 அதிகம் உள்ள உணவுகள்!!!
* கிவி பழத்தில் விட்டமின் பி9 சத்து அதிகம் உள்ளது. மேலும் இந்த பழத்தில் விட்டமின் சி, விட்டமின் கே, நார்ச்சத்துகளும் உள்ளது.
* பப்பாளி பழத்தில் விட்டமின் பி9 சத்து அதிகம் உள்ளது.
* அவகேடோ பழத்தில் விட்டமின் பி9 சத்து அதிகம் உள்ளது.
* முட்டையில் விட்டமின் பி9 சத்துக்கள் அதிகளவு இருக்கின்றது.
* நாம் சாப்பிடும் விலங்குகளின் உள்ளுறுப்பு இறைச்சிகளில் விட்டமின் பி9 சத்துக்கள் இருக்கின்றது.
* கோதுமை பிரட், ஓட்ஸ் போன்ற உணவுகளிலும் விட்டமின் பி9 சத்துக்கள் உள்ளது.
* ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சை போன்ற கிட்ஸ் பழங்களிலும் விட்டமின் பி9 சத்து அதிகளவில் உள்ளது.
* கொண்டைக் கடலை, கருப்பு பீன்ஸ் ஆகியவற்றில் விட்டமின் பி9 சத்துக்கள் அதிகளவில் காணப்படுகின்றது.
* ஸ்பின்னாச், காலே, பிரக்கோலி போன்ற காய்கறிகளிலும் விட்டமின் பி9 சத்துக்கள் அதிகளவில் உள்ளது.