உங்கள் தொழிலில் நல்ல முன்னேற்றம் காண வேண்டுமா? அப்போ இந்த எளிய பரிகாரத்தை செய்து பாருங்கள்.. நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்!!

Photo of author

By Divya

உங்கள் தொழிலில் நல்ல முன்னேற்றம் காண வேண்டுமா? அப்போ இந்த எளிய பரிகாரத்தை செய்து பாருங்கள்.. நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்!!

இக்காலத்தில் பெரும்பாலானோர் சொந்தமாக தொழில் நடத்தி வருகின்றனர். ஒருசிலருக்கு அதில் முன்னேற்ற கண்டு இருப்பார்கள். ஒருசிலர் லாபம் இல்லாத தொழில் என்று புலம்பிக் கொண்டிருப்பார்கள். லாபம் பார்க்கும் நபரோ, நஷ்டம் அடைந்த நபரோ யாராக இருந்தாலும் சில ஆன்மீக வழிகளை கடைபிடித்தால் நிச்சயம் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

தொழில் / வியாபாரம் துவங்குவதற்கு முன், கீழே உள்ள மந்திரத்தை 27 முறை சொல்லி விட்டு துவங்குங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் 21 நாட்களில் நல்ல தொழில் முன்னேற்றத்தைக் கண் கூடாகப் பார்க்க முடியும்.

இதற்கு பெயர் “சஸ்திர பந்தம்”

“வாலவே தாந்தபா வாசம்போ கத்தன்பா

மாலைபூ ணேமதிற மால்வலர்தே – சாலவ

மாபாசம் போக மதிதேசார் மாபூதம்

வாபாதந் தாவேல வா”

இது பாம்பன் சுவாமிகள் நமக்கு அருளிய மந்திரம் ஆகும். இதற்கு முருகனை நோக்கிக் கூப்பிட்டு நமது தொழிலைத் துவங்குகிறோம் என்று அர்த்தம்.

இந்த மந்திரத்தை முதல் 3 முதல் 4 நாட்களுக்கு படிப்பது சற்று சிரமமாக இருந்தாலும் போக போக மனப்பாடம் ஆகிவிடும்.

இந்த மந்திரத்தை சொல்லிவிட்டு அன்றைய நாள் தொழிலை துவங்கினால் நிச்சயம் நல்ல மாற்றத்தை விரைவில் பார்க்க முடியும். இதை மனதார முழு நம்பிக்கையுடன் செய்யவும். 21 நாட்களுக்கு பின் நடக்கும் தொழில் முன்னேற்றத்தை கண் கூடாக பார்க்க முடியும்.