உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு செம்ம டேஸ்டாக செய்ய வேண்டுமா? அப்போ இந்த முறையை ட்ரை பண்ணி பாருங்க!!
நம்மில் பெரும்பாலானோருக்கு பிடித்த உணவு பொருட்களில் ஒன்று முட்டை.இதில் அதிகளவு
கால்சியம்,பாஸ்பரஸ்,புரதம்,செலினியம்,போலிக் அமிலம்,இரும்பு,வைட்டமின்கள் மற்றும் அயோடின் இருக்கின்றது.இந்த முட்டையை தொடர்ந்து உணவில் எடுத்து வந்தோம் என்றால் எலும்பு வளர்ச்சி,உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.
இந்த ஆரோக்கியமான முட்டையில் சுவையான உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு செய்யும் முறை எப்படி என்ற தெளிவான விளக்கம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
தேவையான பொருட்கள்:-
*முட்டை – 4
*சோம்பு – 1 தேக்கரண்டி
*எண்ணெய் – 3 தேக்கரண்டி
*பச்சை மிளகாய் – 4
*தக்காளி – 2
*கருவேப்பிலை – கொத்து
*பெரிய வெங்காயம் – 2 (நறுக்கியது)
*இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
*கொத்தமல்லி தழை – சிறிதளவு
*மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
*உப்பு – தேவையான அளவு
*மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
*கொத்தமல்லி தூள் – 2 தேக்கரண்டி
*கரம் மசாலா – 1/2 தேக்கரண்டி
*தேங்காய் – 3 தேக்கரண்டி (துருவியது)
செய்முறை:-
1)அடுப்பில் கடாய் வைத்து அதில் 3 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றவும்.அவை சூடேறியதும்
சோம்பு 1/2 தேக்கரண்டி, கருவேப்பிலை சிறிதளவு,பச்சை மிளகாய் 4 சேர்த்து பொரிய விடவும்.
2)பிறகு அதில் நறுக்கிய பெரிய வெங்காயம் 2 சேர்த்து வதக்கவும்.
3)அதன் பின் இஞ்சி,பூண்டு விழுது 1 தேக்கரண்டி சேர்த்து வதக்கவும்.பிறகு கொத்தமல்லி தழை
சிறிதளவு சேர்க்கவும்.
4)அதன் பின் 2 தக்காளி பழத்தை எடுத்து சுத்தம் செய்து மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு அரைத்து கொள்ளவும்.இதை கடாயில் சேர்த்து வதக்கவும்.
5)பிறகு தேவையான அளவு உப்பு,1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்,1 தேக்கரண்டி மிளகாய் தூள்,1
2 தேக்கரண்டி மல்லித்தூள் மற்றும் 1/2 தேக்கரண்டி கரம் மசால் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.பின்னர் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அவற்றை கொதிக்க வைக்கவும்.
6)இந்த சமயத்தில் துருவிய தேங்காய் 3 தேக்கரண்டி,சோம்பு 1/2 தேக்கரண்டி எடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி மைய்ய அரைக்கவும்.இதை கொதிக்கும் குழம்பில் சேர்க்கவும்.
7)பின்னர் அதன் பச்சை வாசனை நீங்கியபின் அதில் 4 முட்டைகளை உடைத்து ஊற்றவும்.பிறகு மிதமான தீயில் 5 நிமிடங்கள் அவற்றை வேக விடவும்.
8)இறுதியாக வாசனைக்காக சிறிதளவு கொத்தமல்லி தழைகளை சேர்த்து குழம்பை இறக்கவும்.