வெயிலுக்கு இதமாக எலுமிச்சை சர்பத் சட்டுனு ரெடி பண்ண வேண்டுமா? இதோ ஈசியான லெமன் ஸ்குவாஷ்

0
274
#image_title

வெயிலுக்கு இதமாக எலுமிச்சை சர்பத் சட்டுனு ரெடி பண்ண வேண்டுமா? இதோ ஈசியான லெமன் ஸ்குவாஷ்!

வெயில் காலம் தொடங்கி விட்டது. இந்த வெயிலுக்கு இதமாக தாகத்தை தீர்க்க அடிக்கடி  ஏதாவது குடித்தால் நன்றாக இருக்கும் என தோன்றும். அதுவும் வெயிலில் வெளியே சென்று விட்டு உள்ளே நுழைந்தவுடன் ஜில்லுனு ஏதாவது குடித்தால் நன்றாக இருக்கும் என நினைப்பு வரும். அந்த சமயத்தில் இந்த லெமன் ஸ்குவாஷ் இருந்தால் சட்டுனு 2  அல்லது 3 நிமிடங்களில் சட்டுன்னு லெமன் சர்பத் செய்துவிடலாம்.

அதாவது ஸ்குவாசுடன் ஐஸ் வாட்டர் கலந்தால் லெமன் சர்பத் ரெடி. இந்த ஸ்குவாஷை செய்து ஃப்ரிட்ஜில் வைத்து இரண்டு மாதங்கள் வரை பயன்படுத்தலாம். இதில் கெடாமல் இருப்பதற்காக எந்தவித கெமிக்கல்களும் சேர்க்கப்படவில்லை.

*** இதற்காக ஒரு கிலோ எலுமிச்சம் பழங்களை எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் பத்து முதல் 12 பழங்கள் வரை இருக்கும். இதை தரையில் வைத்து உள்ளங்கை மூலம் நன்றாக அழுத்தி தேய்க்க அதிக சாறு கிடைக்கும்.

*** எல்லா பழங்களையும் உருட்டியதும் இரண்டாக நறுக்கவும். பின்னர் இதிலிருந்து எலுமிச்சை ஜூஸ் பிழியவும். இதை ஒரு கப்பில் அளந்து கொள்ளவும்.

*** எலுமிச்சை ஜூஸ் 2 கப் எனில் ஸ்குவாஷ் செய்ய சர்க்கரை 4 கப் எடுத்துக் கொள்ள வேண்டும். அதாவது எலுமிச்சை ஜூஸ் இரு மடங்காக சர்க்கரை இருக்க வேண்டும்.

***  ஒரு அகன்ற பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் இரண்டு கப் எலுமிச்சை சாறுக்கு இரண்டு மடங்காக 4 கப் அளவு சர்க்கரையை சேர்க்கவும். பிறகு இதில் எலுமிச்சை ஜூஸ் அளவில் தண்ணீர் சேர்க்கவும்.

*** இதை நன்றாக கொதிக்க விட வேண்டும். சர்க்கரை பாகு நன்கு திக்காக மாற வேண்டும். அதாவது பாகுபதம் பிசுக்கு பதமாக இருக்க வேண்டும்.  தொட்டுப் பார்த்தால் பிசுபிசுவென ஒட்ட வேண்டும். கம்பி பதம் இருக்கக் கூடாது.

*** பாகுபதம் வந்ததும் தொட்டு பார்த்து பிறகு அடுப்பை அணைத்துவிட்டு சிறிது நேரம் ஆற விடவும். நன்கு ஆறியதும் சர்க்கரை பாகில் எடுத்து வைத்த எலுமிச்சை ஜூசை சேர்க்கவும். பின்னர் இதில் இனிப்பை சமன் செய்ய ஒரு ஸ்பூன் உப்பை சேர்க்கவும். இமாலயன் இந்து உப்பு சேர்ப்பது மிகவும் நல்லது.

*** இவை அனைத்தையும் நன்றாக கலக்கி விட்டு பின்னர் ஒரு வடிகட்டியில் வடிகட்டி ஒரு ஈரம் இல்லாத பாட்டிலில் சேகரித்து வைத்துக் கொள்ளலாம். தற்போது லெமன் ஸ்குவாஷ் ரெடி. எலுமிச்சை பழத்தில் ஏற்கனவே சுற்றிக் அமிலம் இருப்பதால் எந்த வித பிரிசர்வேட்டிவும் தேவைப்படாது.

*** ஒரு டம்ளரில் 1 டேபிள்ஸ்பூன் ஊற வைத்த சப்ஜா விதைகளை எடுத்துக்கொண்டு அதில் 3 ஸ்பூன் லெமன் ஸ்குவாஷ் சேர்த்து தேவையான தண்ணீர் ஊற்றினால் வெயிலுக்கு இதமான லெமன் சர்பத் ரெடி.

 

Previous articleஇல்லத்தரசிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. கேஸ் சிலிண்டரின் மானியம் ரூ 200 உயர்வு!!
Next articleஅனைத்து இல்லத்தரசிகளுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்க விஜயதாரணி வலியுறுத்தல்