இல்லத்தரசிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. கேஸ் சிலிண்டரின் மானியம் ரூ 200 உயர்வு!!

0
147
#image_title

இல்லத்தரசிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. கேஸ் சிலிண்டரின் மானியம் ரூ 200 உயர்வு!!

மக்களின் அன்றாட தேவைகளில் ஒன்றாக இருப்பதுடன் சிலிண்டர். இவற்றின் விலையை எண்ணெய் நிர்வாணமானது மாதந்தோறும் நிர்ணயித்து வரும் பட்சத்தில் நிலையான விலையை விட ஏற்றம் இறக்கமாக தான் காணப்படும்.

சமீப காலமாக வணிக சிலிண்டரின் விலை ஆனது சற்று அதிகரித்து காணப்பட்டு வரும் நிலையில் வீட்டு உபயோக சிலிண்டரில் எந்த ஒரு மாற்றமும் இல்லாத இருந்தது.ஆனால் இந்த மாதம் ரூ.50 உயர்ந்துள்ளது.

இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் எண்ணெய் நிறுவனம் வெளியிட்டு விட்டது.தற்போதைய நாட்களில் ரூ 1068 கொடுத்து சிலிண்டர் வாங்கிய நிலையில் இனி 1118 கொடுக்க வேண்டி இருக்கும்.

குறிப்பாக பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் சிலிண்டர் வாங்கும் நபர்களுக்கு மானியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் இவர்களுக்கு மாதம் ஒன்று என்ற வீதத்தில் வருடத்திற்கு 12 கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்பட்டு வருகிறது.

தற்பொழுது சிலிண்டர் விலை உயர்ந்துள்ளதால் மானியத்தை அதிகரித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

எனவே இனிவரும் நாட்களில் உஜ்வாலா திட்டத்தின் கீழ் சிலிண்டர் வாங்கும் நபர்களுக்கு ரூ 200 மானியம் சேர்த்து வழங்கப்படும் என கூறியுள்ளனர்.

நமது தமிழகத்தில் மட்டும் கிட்டத்தட்ட 35 லட்சம் பேருக்கு இந்த மானியம் கிடைக்கும் என கூறுகின்றனர்.