முகம் பொலிவாக மாற வேண்டுமா!!! அதற்கு அரிசி ஊறவைத்த நீர் போதும்!!!

Photo of author

By Sakthi

முகம் பொலிவாக மாற வேண்டுமா!!! அதற்கு அரிசி ஊறவைத்த நீர் போதும்!!!

நமது முகம் பொலிவாக மாறவும், தலைமுடி உதிர்தலை கட்டுப்படுத்தவும் அரிசியை ஊற வைத்த நீர் பயன்படுகின்றது. அது எப்படி இதன் மற்ற பயன்கள் என்ன என்று தெரிந்து கொள்ளலாம்.

நாம் அரிசியை ஊறவைத்து பிறகு அதன் தண்ணீரை கீழே ஊற்றிவிடுகிறோம். ஆனால் இந்த அரிசியை ஊறவைத்த நீரில் நிறைய சத்துக்கள் நமக்கு கிடைக்கின்றது. இந்த அரிசியை ஊறவைத்த தண்ணீரில் இருந்து நமது தலை முடிக்கும், சருமத்திற்கும் பல நன்மைகள் கிடைக்கின்றது.

அரிசியை 30 நிமிடம் ஊறவைத்து அதனை நன்கு பிசைந்து கழுவி எடுக்கும் நீரில் ஆன்டி ஆக்சிடன்ட் சத்துக்கள், கார்போஹைட்ரேட்டுகள், தாதுக்கள் ஆகிய சத்துக்கள் அடங்கியுள்ளது. அரிசியை கழுவி கீழே ஊற்றப்படும் தண்ணீரானது நமது சருமத்திற்கும் தலை முடிக்கும் ஏற்றது.

சருமத்திற்கு பயன் தரும்…

30 நிமிடங்கள் அரிசியை ஊறவைத்து நன்கு கழுவி அந்த தண்ணீரை எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இந்த தண்ணீரை கொண்டு முகத்தையும் கைகளையும் கழுவி வந்தால் முகம் நன்கு பொலிவு பெறும். சருமம் பொலிவாக மாறும். மேலும் சருமத்தில் உள்ள இறந்த செல்களை வெளியேற்றும்.

தலைமுடிக்கு நல்ல பயன் தரும்…

அரிசியை ஊறவைத்து கழுவிய தண்ணீரை நாம் தலை முடிக்கும் பயன்படுத்தலாம். தலை முடிக்கு பயன்படுத்தும் பொழுது தலை முடி உதிர்வது கட்டுப்படுத்தப்படுகின்றது. தலைக்கு குளிக்கும் பொழுது ஷேம்பு தேய்த்து குளித்த பின்னர் அரிசியை ஊறவைத்த தண்ணணீரை தலைக்கு தேய்த்து நன்கு மசாஜ் செய்தால் நல்ல பலனை கொடுக்கும். கூந்தல் நீளமாக வளரும்.

பிறந்த குழந்தைகளுக்கு பலன் தரும்…

பிறந்த குழந்தைகளுக்கு கால்கள் வலிமை பெறுவதற்கு அரிசியை ஊறவைத்த தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து இளஞ்சூடாக ஆறிய பின்னர் அந்த நீரை கொண்டு குழந்தைகளின் கால்களில் ஊற்றி கால்களை பிடித்து விட்டால் குழந்தைகளின் கால்கள் வலிமை பெறும்.