சுலபமான முறையில் எண்ணெய் குடிக்காத முறுக்கு!! இப்படி செய்தால் மொறு மொறுனு சுவையான இருக்கும்!!

0
32
#image_title

சுலபமான முறையில் எண்ணெய் குடிக்காத முறுக்கு!! இப்படி செய்தால் மொறு மொறுனு சுவையான இருக்கும்!!

நம்மில் பெரும்பாலானோருக்கு முறுக்கு ஒரு விருப்பமான பண்டமாக இருந்து வருகிறது.அதனை நொறுங்கும் சத்தத்தோடு சுவைக்கும் பொழுது சொல்ல வாரத்தையே இல்லை.ஆனால் முறுக்கு செய்வது மிகவும் கடினம் என்று உங்களில் பலர் நினைத்து கொண்டிருக்கிறீர்கள்.கடையில் வாங்கி உண்ணும் முறுக்கு டேஸ்ட்டாக இருக்கும் என்பது உண்மை தான் ஆனால் நம் உடலுக்கு ஆரோக்கியமான முறையில் இருக்குமா? என்று நாம் சிந்திக்க வேண்டும்.முறுக்கு சுவைப்பது எப்படி சுலபமோ அதேபோல் தான் அதனை செய்வதும் சுலபம்.

தேவையான பொருட்கள்:-

1.அரிசி மாவு – 1 கப்

2.பொட்டுக்கடலை மாவு – 1/2 கப்

3.சீரகம் – 1 1/2 ஸ்பூன்

4.தூள் உப்பு – தேவையான அளவு

5.எண்ணெய் – முறுக்கு செய்வதற்கு தேவையான அளவு

6.தண்ணீர் – 1 கப்

7.மிளகாய் தூள் – 1 ஸ்பூன்

செய்முறை:-

*பொட்டுக்கடலை முறுக்கு செய்வதற்கு முதலில் பொட்டுக்கடலையை மிக்ஸியில் போட்டு மாவாக நைசாக அரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.

*அரைத்த பொட்டுக்கடலை மாவை ஒரு சலிக்கும் ஜல்லடையில் போட்டு சலிக்க வேண்டும்.

*அதே ஜல்லடையில் அரிசி மாவும் சேர்த்து சலித்துக் கொள்ளுங்கள்.

*பொட்டுக்கடலை மாவு மற்றும் அரிசி மாவு என இரண்டையும் கலந்து அவற்றில் தேவைக்கேற்ப உப்பு சேர்த்து கொள்ள வேண்டும்.பிறகு அதில் மிளகாய் தூள் சேர்க்க வேண்டும்.

*சீரகத்தை கைகளால் நன்கு தேய்த்து அந்த மாவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

*பின்னர் 1 குழி கரண்டி அளவிற்கு எண்ணெயை சூடாக்கி அவற்றை அந்த மாவில் சேர்க்க வேண்டும்.

*அதில் 1 கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி நன்கு பிசைய வேண்டும்.மாவை அதிக ஈரப்பதம் இல்லாமல் கொஞ்சம் கெட்டியாக பிசைய வேண்டும்.அப்போழுது தான் முறுக்கு செய்யும் பொழுது எண்ணெய் அதிகம் குடிக்காமல் இருக்கும்.

*இப்பொழுது அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு கடாய் வையுங்கள்.முறுக்கு சுட்டு எடுக்கும் அளவிற்கு எண்ணெய் ஊற்றி காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கொள்ளுங்கள்.

*பிசைந்து வைத்துள்ள மாவை சிறு உருண்டைகளாக முறுக்கு பிழியும் பாத்திரத்தில் சேர்த்து முறுக்கு பிழிவது போல சுற்றி எடுத்து வைத்து கொள்ள வேண்டும்.முறுக்கு பிழியும் பொழுது எப்பொழுதும் கரண்டிக்கு பின்புறம் வைத்து பிழிந்தால் எண்ணெயில் போட்டு எடுப்பதற்கு வசதியாக இருக்கும்.

*பிழிந்து வைத்துள்ள முறுக்கு மாவை எண்ணெயில் சேர்த்து இருபுறமும் பொன்னிறமாக சிவக்க வரை விட்டு எடுத்துக் கொள்ள வேண்டும்.இவ்வாறு அடுத்தடுத்து செய்தோம் என்றால் சூடான சுவையான முறுக்கு ரெடி.இந்த முறையில் முறுக்கு செய்தால் ரொம்பவே மொறுமொறுபாக வாயில் வைத்ததும் கரையும் படியாக இருக்கும்.