மீதமான பழைய சோற்றை தூக்கி எரியாமல் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!! மொறு மொறுனு டேஸ்ட்டா இருக்கும்!!

0
33
#image_title

மீதமான பழைய சோற்றை தூக்கி எரியாமல் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!! மொறு மொறுனு டேஸ்ட்டா இருக்கும்!!

நம்மில் பெரும்பாலானோர் வீடுகளில் தேவைக்கு அதிகாமாக சாதத்தை சமைத்து விட்டு மீதி இருக்கும் சாதத்தை மறுநாள் வெளியில் கொட்டி விடுகிறோம்.ஆனால் இந்த மீதமான பழைய சாதம் நீச்சம் தண்ணீர்,வடகம்,தாளிப்பு சாதம் உள்ளிட்ட உணவுகளாக மாறும் என்று நம்மில் பெரும்பாலானோருக்கு தெரிந்திருந்தாலும் ஒரு சிலருக்கு இதன் மகிமை தெரியவில்லை.இந்த பழைய சாதத்தில் தாளித்த சாதம்,வடகம் உள்ளிட்டவற்றை செய்து உண்டவர்களுக்கு தெரியும் அதன் டேஸ்ட்.பழைய சாதம் என்றால் முகம் சுளிக்கும் நபர்களே ஒரு முறை கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறையை கடைபிடித்து பாருங்கள் இனி அடிக்கடி செய்ய ஆரமித்து விடுவீர்கள்.

தேவையான பொருட்கள்:

பழைய சோறு – 1 கப்

மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி

சீரகம் – 1 தேக்கரண்டி

தூள் உப்பு – தேவைக்கேற்ப

மிளகு – 1/2 தேக்கரண்டி

செய்முறை:-

1.முந்தின நாள் மீதமான சோற்றில் தண்ணீர் ஊற்றி வைக்க வேண்டும்.அடுத்த நாள் காலையில் அந்த மீதமான சோற்றை நன்கு பிழிந்து ஒரு பாத்திரத்திற்கு மாற்றி வைத்து கொள்ள வேண்டும்.

2.பிழிந்து வைத்துள்ள சோற்றில் 1 தேக்கரண்டி மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு அரைக்க வேண்டும்.

3.பிறகு அவற்றை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி அதில் சீரகம்,மிளகு சேர்த்து நன்கு கலக்கி கொள்ள வேண்டும்.

4.பிறகு பாதம் படாத இடத்தில் ஒரு காட்டன் துணியை போட்டு,முறுக்கு பிழியும் உலக்கையில் அவற்றை அரைத்து வைத்துள்ள கலவையை சேர்த்து நன்கு பிழிய வேண்டும்.

5.குறைந்தது 3 முதல் 4 நாட்களுக்கு நல்ல வெயில் படும் இடத்தில் அவற்றை காய வைக்க வேண்டும்.

6.நன்கு மொறு மொறுவென்று காய்ந்த பிறகு வத்தலை ஒரு ஈரம் இல்லாத பாத்திரத்தில் சேமித்து வைத்து கொள்ள வேண்டும்.

7.அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் வத்தல் பொறிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அவை காய்ந்த பிறகு தயார் செய்து வைத்துள்ள பழைய சோற்று வற்றலை அதில் போட்டு பொறித்து எடுக்க வேண்டும்.