மேக்கப் இல்லாமல் முகம் ஜொலிக்க வேண்டுமா!! இந்த ஃபேஸ் பேக்கை ட்ரை பண்ணுங்க!!
எல்லோருக்கும் தனது முகமானது அழகாக பளபளப்பாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். ஆனால் ஒரு சிலர் எவ்வளவு முகத்திற்காக நேரம் எடுத்து என்ன பண்ணினாலும் தன்னுடைய முகம் எப்பொழுதும் டல்லாகவே இருப்பதாக சிரமப்படுகிறார்கள்.
எனவே முகம் எப்பொழுதும் பொலிவாக பளபளப்பாக அழகாக காணப்பட வீட்டிலேயே இதை செய்து பயன்படுத்துங்கள் உடனடியாக தீர்வு கிடைக்கும்.
செய்முறை:
முதலில் ஒரு வெள்ளரிக்காயை எடுத்து அதன் தோலை சீவி விட்டு அதை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளவும். சிறிது சிறிதாக நறுக்கிய இந்த வெள்ளரிக்காயை மிக்ஸி ஜாரில் சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
இப்போது அரைத்து வைத்த இந்த விழுதிலிருந்து இரண்டு தேக்கரண்டி அளவு எடுத்து இன்னொரு பௌலில் சேர்க்கவும். இதனுடன் ஒரு தேக்கரண்டி அளவு தேனை சேர்த்துக் கொள்ளவும். இப்போது இதனுடன் ஒரு தேக்கரண்டி அளவு பிரவுன் சுகரை சேர்த்துக் கொள்ளவும். இப்போது இதனுடன் தேவையான அளவு பாலை சேர்த்துக் கொள்ளலாம்.
இப்போது இந்த வெள்ளரிக்காய் விழுது, தேன், பிரவுன் சுகர், மற்றும் பால் எல்லாவற்றையும் நன்கு கலந்து கொள்ள வேண்டும். இதை முகத்தில் தடவுவதற்கு முன்பாக முகத்தை நன்கு கழுவி விட்டு இந்த பேஸ் பேக்கை தடவி 20 நிமிடங்களுக்கு அப்படியே விடவும். 20 நிமிடங்களுக்குப் பிறகு சாதாரண தண்ணீரில் முகத்தை கழுவி விடவும்.
உங்களுடைய முகம் எப்பொழுதெல்லாம் சோர்ந்து இருக்கிறதாக நீங்கள் உணர்கிறீர்களோ அப்பொழுதெல்லாம் இதை வீட்டிலேயே தயார் செய்து பேஸ் பேக்காக பயன்படுத்தி வர முகம் நன்கு அழகாக பொலிவுடன் பளபளப்பாக காணப்படும்.
இந்த ஃபேஸ் பேக் செய்து பயன்படுத்துவதால் எந்த ஒரு பக்க விளைவுகளும் கிடையாது. எனவே செயற்கையான முறையில் அழகு பெறுவதற்காக பயன்படுத்தக்கூடிய பொருட்களை தவிர்த்து விட்டு இதுபோல வீட்டிலேயே இயற்கையாக செய்து வருவதால் உடனடியாக நம் சருமத்தில் மாற்றம் தெரியும்.
இதில் சேர்த்து இருக்கக்கூடிய வெள்ளரிக்காய் நம் முகத்திற்கு பொலிவை தருவதோடு மட்டுமல்லாமல் இதில் இருக்கக்கூடிய நீர் சத்தானது நம் முகத்தில் இருக்கக்கூடிய பிரச்சனைகளை தீர்க்கக் கூடியது. முகத்தில் இருக்கக்கூடிய எரிப்பு, அரிப்பு, தடிப்பு போன்றவற்றை சரி செய்வது மட்டுமல்லாமல் முகத்திற்கு ஒரு தனி குளிர்ச்சியை தருவது இந்த வெள்ளரிக்காய்.
இதில் நாம் தேன் சேர்ப்பதால் நம் முகம் எப்பொழுதும் பொலிவாகவும் பளபளப்பாகவும் காணப்படும்.இது நம் முகத்தில் இருக்கக்கூடிய அத்தனை அழுக்கையும் வெளியே தள்ளிவிடும். பால் நம் சருமத்தை எப்பொழுதும் ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்ளும்.