கையால் பிடிக்க முடியாத அளவுக்கு கூந்தல் வளர வேண்டுமா!!? அப்போ இந்த எண்ணெயை வாரம் ஒரு முறை பயன்படுத்துங்கள்!!!

0
120
#image_title

கையால் பிடிக்க முடியாத அளவுக்கு கூந்தல் வளர வேண்டுமா!!? அப்போ இந்த எண்ணெயை வாரம் ஒரு முறை பயன்படுத்துங்கள்!!!

இந்த பதிவில் நீளமான மற்றும் அடர்த்தியான கூந்தல் வளர்ச்சிக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

பெண்களில் பலருக்கும் இருக்கும் ஆசை முடி வளர்ச்சி அதிகமாகவும் அடர்த்தியாகவும் இருக்க வேண்டும் என்பது தான். ஆனால் அதற்கு சரியான வழிமுறைகளை யாரும் பின்பற்றாமல் இருக்கிறார்கள்.

முடி வளர்ச்சி அதிகரிக்க வேண்டும் என்றால் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். பிறகு தலைக்கு எண்ணெய்ச் சத்து மிகவும் அவசியம். எண்ணெய் சத்து இல்லை என்றால் தலையில் வறட்சி ஏற்படும். முடி உதிர்தல் பிரச்சனை ஏற்படும்.

எனவே தலைமுடி ஆரோக்கியம் இருந்தால் கூந்தல் வளர்ச்சி என்பது அதிகரிக்கும். இதற்கு இந்த பதிவில் கூறப்பட்டிருக்கும் எண்ணெயை தயார் செய்து அதை வாரம் ஒரு முறை பயன்படுத்தினால் போதும். இந்த எண்ணெயை தயார் செய்யத் தேவையான பொருள்கள் என்ன எவ்வாறு தயார் செய்வது என்பது பற்றி பார்க்கலாம்.

இந்த எண்ணெயை தயார் செய்ய தேவையான பொருள்கள்…

* தேங்காய் எண்ணெய்
* கற்றாழை ஜெல்
* கறிவேப்பிலை
* செம்பருத்தி இலைகள்
* துளசி இலைகள்

செய்முறை…

முதலில் கற்றாழையில் இருந்து கற்றாழை ஜெல்லி மட்டும் தனியாக பிரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் காய் ஒன்று வைத்து எடுத்து வைத்துள்ள தேங்காய் எண்ணெயை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் இதில் செம்பருத்தி இலைகள், கறிவேப்பிலை, துளசி இலைகள் சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் இதில் எடுத்து வைத்துள்ள கற்றாழை ஜெல்லை சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.

இவை அனைத்தும் நன்கு கொதித்த பின்னர் இதில் இருந்து எண்ணெயை மட்டும் வடிகட்டி எடுத்து கொள்ள வேண்டும். சூடு அறியும் தலைக்கு தேய்த்து கொள்ள வேண்டும். 30 நிமிடம் கழிந்து தலைக்கு குளிக்க வேண்டும்.

இதை வாரம் ஒரு முறை செய்தால் போதும். தலையில் ஏற்படுகின்ற அனைத்து விதமான பிரச்சினைகளும் சரியாகும். கூந்தல் வளர்ச்சி அதிகரிக்கும். முடி உதிர்தல் பிரச்சனை சரியாகும்.

Previous articleதன் தாயின் கண்ணீரைப் பார்த்த சிவாஜி.. – என்ன செய்தார்ன்னு தெரியுமா?
Next articleதக்காளி சட்னி சுவையாக செய்வது எப்படி? ஆஹா.. என்ன ஒரு ருசி!!