கொரோனாவில் இருந்து தப்பிக்க!! மருத்துவர் சொல்லும் இந்த அறிவுரையை கேளுங்க!

0
145

கொரோனாவின் கோரத்தாண்டவம் நாளுக்கு நாள் பெருகி வரும் நிலையில் மக்கள் வீடுகளில் இருந்து தங்களைத் தாமே தனிமைப்படுத்திக் கொண்டு இருக்கின்றனர். ஒரு பக்கம் மக்கள் கொத்துக்கொத்தாக இறந்துவருகின்றனர். சிறு அறிகுறிகள் சளி இருமல் இருந்தாலும் தமக்கும் கொரோனா தான் என்று பயத்திலேயே பாதிப்பேரின் உயிர் பறிபோய் விடுகிறது.இந்த பயத்தில் இருந்து வெளிவரும் விதமாக கொரோனா பாதிப்பில் இருந்து தப்பிக்க தேனி மாவட்டம், உத்தமபாளையம் அரசு மருத்துவமனை சித்தா டாக்டர் சுவாமிநாதன் அருமையான நாட்டு வைத்திய வழிமுறைகளை கூறியுள்ளார்.

அதை பற்றி இங்கு காண்போம்.

 

1. காலையில் எழுந்த உடன் 200 மில்லி தண்ணீரில் 1 துண்டு இஞ்சி, கால் டீஸ்பூன் மஞ்சள், ஒரு வெற்றிலை ஆகியவற்றை போட்டு நன்கு காய்ச்சி 50 மில்லி வரும் வரை சுண்ட வைத்து வடிகட்டி குடித்து வரலாம். இது உடம்பில் உள்ள வைரஸை அழிக்கும்.

 

2. ஒரு 11 மணி அளவில் முருங்கை கீரை ரசம் அல்லது சூப் செய்து குடிக்கலாம். இது உடலுக்கு மிக நல்லது. உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

 

3. 4.00 மணி அளவில் கபசுர குடிநீர் குடிக்கலாம். தண்ணிரில் ஒரு ஸ்பூன் அளவு போட்டு நன்கு காய்ச்சி குடிக்கலாம். வேண்டுமென்றால் நிலவேம்பு குடிநீரை சேர்த்து கொள்ளலாம்.

 

4. 7.00 மணி அளவில் கிராம்பு 1, பட்டை 1, ஏலக்காய் 1 ஓமம் 1/4 ஸ்பூன் ஆகியவற்றை ஒன்றாய் சேர்த்து நீரில் கொதிக்க வைத்து பனங்கற்கண்டு சேர்த்து குடிக்கலாம். கிராம்பு உடலுக்கு தேவையான ஆக்ஸிஜனை தருகிறது.என அவர் கூறயுள்ளார். இது போன்ற முறைகளை வீட்டில் இருந்தே செய்து வருமுன் காத்து கொள்ளுங்கள்.

 

 

 

 

Previous articleஇன்று 4500 சிறப்பு பேருந்துகள் இயக்கம்! கடைசி பேருந்துகளின் நேரம் – இதோ!!
Next articleபிஞ்சு குழந்தையின் கால்களை பார்த்ததும் மயக்கம் வந்துவிட்டது! கால்வாயில் கிடந்த பிறந்த குழந்தை!