இன்று 4500 சிறப்பு பேருந்துகள் இயக்கம்! கடைசி பேருந்துகளின் நேரம் – இதோ!!

0
68

தமிழகத்தில் வரும் முழு ஊரடங்கின் காரணமாக 4500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. வெளியூர் செல்பவர்கள் நலன் கருதி சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.

 

தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால் முழு ஊரடங்கை அரசு அறிவித்துள்ளது. மே 24 ஆம் தேதி தொடங்க உள்ள ஒரு ஊரடங்கின் காரணமாக இன்று சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. ஒரு வாரம் அமலில் இருக்கும் முழு ஊரடங்கு காரணமாக அரசு சில தளர்வுகளை கொடுத்துள்ளது. அதன் மூலம் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் நேற்றும் இன்றும் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 

தமிழகத்தில் 4500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. சென்னையில் இருந்து மற்ற நகரங்களுக்கு 1500 பேருந்துகளும், கோவை, திருச்சி, திருப்பூர், சேலம் உள்ளிட்ட நகரங்களிலிருந்து 3000 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. இந்த இரு நாட்களில் வெளி ஊருக்கு செல்வோர் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்பதால் அதிகமான பேருந்துகள் இயக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

 

தேவைக்கேற்ப இரவு நேரங்களில் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. அது மட்டுமின்றி முக்கிய நகரங்களுக்கு செல்லும் பேருந்தின் கடைசி நேரமும் போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது.

 

சென்னை – மார்த்தாண்டம் – மாலை 6 மணி

சென்னை – நாகை – தூத்துக்குடி – மாலை 7 மணி

சென்னை – செங்கோட்டை மாலை 7.30 மணி

சென்னை – நெல்லை – திண்டுக்கல் இரவு 8 மணி

சென்னை – மதுரை இரவு 11.30 மணி

சென்னை – திருச்சி இரவு 11.45 மணி

இந்த நேரங்களில் புறப்படும் என்று தெரிவித்துள்ளது.

 

author avatar
Kowsalya