சளி இருமல் பாடாய் படுத்துகிறதா? உடனே இந்த ஒரு பொடியை நீரில் கலந்து குடியுங்கள்!!

Photo of author

By Rupa

இன்று அடிக்கடி சளி,இருமல் தொந்தரவு ஏற்படுவதால் பிறந்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சிரமப்படுகின்றனர்.இந்த சளி,இருமலை குணமாக்க அதிக செலவு இல்லாத எளிய கை வைத்தியம் இதோ.

1.சித்தரத்தை
2.சுக்குத்தூள்
3.தேன்

நாட்டு மருந்து கடையில் சித்தரத்தை பொடி கிடைக்கும்.100 கிராம் அளவிற்கு வாங்கிக் கொள்ளவும்.பிறகு ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி லேசாக வறுத்து பொடி செய்து கொள்ளவும்.

அடுத்து ஒரு கிண்ணம் எடுத்து 20 கிராம் சித்தரத்தை பொடி மற்றும் 20 கிராம் சுக்குத்தூள் சேர்த்து மிக்ஸ் செய்யவும்.பின்னர் அதில் ஒரு தேக்கரண்டி அளவு தூயத் தேன் சேர்த்து மிக்ஸ் செய்யவும்.இதை காலை மற்றும் மாலை என இருவேளை சாப்பிட்டு வந்தால் நெஞ்சுசளி,வறட்டு இருமல்,காய்ச்சல் உட்பட அனைத்து பாதிப்புகளும் குணமாகும்.

1.சித்தரத்தை பொடி
2.திரிகடுகம் பொடி
3.அதிமதுரம் பொடி
4.தேன்

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் 10 கிராம் சித்தரத்தை பொடி,10 கிராம் திரிகடுகம் பொடி மற்றும் 10 கிராம் அதிமதுரப் பொடி சேர்த்து சுண்டக் காய்ச்சவும்.இதை ஒரு கிளாஸிற்கு ஊற்றி சிறிது தேன் கலந்து குடித்து வந்தால் ஒற்றை தலைவலி,மூக்கடைப்பு,நெஞ்சு சளி உள்ளிட்ட பாதிப்புகள் அனைத்தும் குணமாகும்.

1.சித்தரத்தை பொடி
2.அமுக்கிரா கிழங்கு பொடி
3.தேன்

ஒரு பாத்திரத்தில் 150 மில்லி தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி சித்தரத்தை பொடி,ஒரு தேக்கரண்டி அமுக்கிரா கிழங்கு பொடி போட்டு குறைந்த தீயில் கொதிக்க வைத்து தேன் கலந்து குடித்தால் சளி,இருமல் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.