ABC ஜூஸ் பருகுவதால் உடலுக்கு இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா? 10 வித பாதிப்புகளுக்கு அருமருந்து!
.ABC ஜூஸ் என்பது ஆப்பிள்,பீட்ரூட்,கேரட் என 3 முக்கிய பொருட்களை வைத்து தயாரிக்கப்படும் பானம் ஆகும்.இந்த ஜூஸ் நம் உடலில் இருக்கின்ற கழிவுகளை வெளியேற்றி உடலை பாதுகாப்பாக வைத்திருக்க பெரிதும் உதவுகிறது.இந்த ஜூஸ் சருமத்திற்கு மிகவும் நல்லது.இந்த ஜூஸ் நம் உடலுக்கு A,B1,B2,B3,B6,B9,C,E, K ,இரும்புச் சத்து,துத்தநாகம்,மெக்னீசியம்,பொட்டாசியம், கால்சியம்,பாஸ்பரஸ் செலினியம் உள்ளிட்ட பல சத்துக்களை அளிக்கிறது.
தேவையான பொருட்கள்:-
*ஆப்பிள் -1
*பீட்ரூட் – 1
*கேரட் -1
செய்முறை:-
1.ஆப்பிள்,கேரட்,பீட்ரூட் ஆகிய மூன்றையும் நன்கு கழுவி கொள்ளவும்.
2.அவற்றின் தோலை சீவி பிறகு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
3.அவற்றை மிக்ஸி ஜாரில் போட்டு சிறிதளவு நீர் ஊற்றி அரைத்து கொள்ளவும்.பிறகு அவற்றை வடிகட்டி பருகவும்.
ABC ஜூஸ் நன்மைகள்:
1.இந்த ஜூஸ் உடலில் உருவாகியுள்ள அல்சர்,குடல் புண்,வயிற்று புண் ஆகியவற்றை குணப்படுத்துகிறது.
2.கண் எரிச்சல்,கண் வலி மற்றும் பார்வை திறன் குறைபாடு உள்ளிட்ட கண் பாதிப்புகளை குணமாக்க இந்த ஏபிசி ஜூஸ் உதவுகிறது.
3.உடல் சோர்வை நீக்கி உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்க இந்த பானம் பெரிதும் உதவுகிறது.
4.குடல் புண் இருந்தால் வாய் துர்நாற்றம் ஏற்படும்.இந்த வாய் துர்நாற்றத்தை சரி செய்ய இந்த பானம் பெரிதும் உதவுகிறது.
5.மூளை மற்றும் இதயம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை குணமாக்கி அவற்றை பாதுகாக்க உதவுகிறது.
6.இந்த ABC ஜூஸ் முகத்தில் இருக்கும் பருக்கள்,கரும்புள்ளிகள் போன்றவற்றை சரிசெய்வதோடு வயது முதிர்வை தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
7.இந்த பானம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு,கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது.
8.பெண்கள் இந்த ஜூஸை அடிக்கடி உட்கொண்டு வந்தால் மாதவிடாய்காலத்தில் ஏற்படும் வலி எளிதில் சரியாகும்.
9.இந்த பானம் உடலில் ஏற்படும் இரத்தசோகை பிரச்சினைக்கு சிறந்த தீர்வாக இருக்கும்.
10.இதில் உள்ள குறைந்த கலோரி மற்றும் அதிக நார்ச்சத்துக்கள் உடல் எடை குறைப்புக்கு பெரிதும் உதுவுகிறது.