கொரோனா வைரஸ் காலத்திலும் உயிரை பணயம் வைத்து பாகிஸ்தான் அணி இங்கிலாந்து சென்று விளையாடி வந்த காரணத்தினால் இதற்கு நன்றிக்கடனாக இங்கிலாந்து அணி பாகிஸ்தான் மண்ணில் விளையாட வேண்டும் என்று முன்னாள் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம் தெரிவித்திருந்தார். ஜோரூட் பேசும்போது நான் பாகிஸ்தான் சென்று விளையாட விரும்புகிறேன். இது என்னுடைய தனிப்பட்ட கருத்து. துரதிருஷ்டவசமாக என்னால் முடிவு எடுக்க முடியாது. கிரிக்கெட் விளையாடுவதற்கும், அங்கு செல்வதற்கும் சிறந்த நாடு பாகிஸ்தான்’’ என்று கூறினார்.